இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் – 7

இந்தியாவின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் – 7
Updated on
2 min read


முகமது ஹுசைன்

16ஆம் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18 அன்று நடைபெற்ற உள்ளது. இந்த நிலையில், 2012க்கும் 2022க்கும் இடையிலான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களுக்கும் பிரதமர்களுக்கும் இடையிலான உறவு குறித்த பார்வை இது:

2012-2017

பிரணாப் முகர்ஜி
பிரதமர்கள்: மன்மோகன் சிங், நரேந்திர மோடி

ஐம்பது ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் ஏறத்தாழ அனைத்து உச்சங்களையுமே பிரணாப் தொட்டிருக்கிறார். எந்தவொரு குறிப்பிட்ட பிரிவிலும் பிரணாப் முகர்ஜியைச் சேர்ப்பது கடினம். ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, பொருளாதார நிபுணர் என அவருக்குப் பல முகங்கள் உண்டு. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2019இல் பிரணாப் முகர்ஜிக்குப் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி நெறிமுறைகள் பல அவருடைய பதவிக் காலத்தில் மீட்டெடுக்கப்பட்டன. பல கருணை மனுக்களை அவர் நிராகரித்தார். காங்கிரஸ்காரராக இருந்த போதிலும், மோடியுடன் நல்லுறவு கொண்டிருந்தார். அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மன்மோகன் சிங், மோடி ஆகிய இருவரிடமும் கடுமையான போக்கைக் கடைப்பிடித்தார்.

2017-2022

ராம் நாத் கோவிந்த்
பிரதமர்: நரேந்திர மோடி

பாஜகவிலிருந்து வந்த முதல் குடியரசுத் தலைவர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இரண்டாவது குடியரசுத் தலைவர். தன்னுடைய இருப்பை அவர் குறைந்த அளவே வெளிப்படுத்தி உள்ளார். குடியரசுத் தலைவரின் மரபுகளை அவர் மீறிச் சென்றதே இல்லை. மோடி அரசாங்கத்தின் முன்னுரிமைகள், நடவடிக்கைகள், மசோதாக்கள் போன்றவற்றுக்கு எதிராக அவர் ஒருமுறை கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவற்றுக்கு எதிராகக் குறைந்தபட்ச அறிக்கை கூட அவர் வெளியிட்டது இல்லை.

1977ல் ஜனதா கட்சியின் ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் உதவியாளராக கோவிந்த் பணியாற்றினார். அதுவே கோவிந்தின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்டது. கடந்த 1990 மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கிய ராம்நாத் கோவிந்த், அந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இந்த தோல்வியை அடுத்து இவர் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேநேரம், உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து இரு முறை மாநிலங்களவை உறுப்பினராக கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in