

இந்தியாவின் முன்னணி பொறியியல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்று Skill-Lync. மின்சார வாகனத்துறையில் மாணவர்களுக்கு ஆழ்ந்த நிபுணத்துவத்தை வழங்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கம். அதற்கேற்ப, மின் வாகனத் துறையின் எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவை மாணவர்களுக்கு அளித்து, அது சார்ந்து உதவும் நோக்கில் மின் வாகனம் ஒன்றை நம் நாட்டிலேயே அது உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூன் 4, 2022 அன்று திருவான்மியூரில் இருக்கும் திறன் மையத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தனது மின் வாகனத்தைக் காட்சிப்படுத்தியது. இந்த முயற்சியில் Skill-Lync நாட்டில் உள்ள முன்னணி உற்பத்தி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. Skill-Lync பொறியாளர்களின் கடும் உழைப்பின் பலனே தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் இந்த மின்சார வாகனம்.
ஒரு மின்சார வாகனத்தை உருவாக்குவதற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய நடைமுறை அறிவை Skill-Lync உருவாக்கி இருக்கும் மின் வாகனம் மாணவர்களுக்கு வழங்கும். இந்த மின்சார வாகனம் 45 கிமீ வேகத்தில் செல்லும்; அதில் 5 பேர் பயணிக்க முடியும். பூஜ்ஜியத்திலிருந்து உச்ச வேகத்தை 6 வினாடிகளில் எட்டும் திறனை இந்த வாகனம் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மின் வாகனம் 9 மாத பயிற்சிக் காலத்தில், சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது.
Skill-Lync இன் இணை நிறுவனர் சாரங்கராஜன் பேசும்போது, “தற்போது மின் வாகனங்கள் உலகளாவிய அளவில் பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக மாறிவருகிறது. அதிநவீன அமைப்புகளில் உருவாக்கப்படும் இந்த வாகனங்களை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், சோதிக்கவும் புதிய வாகன பொறியாளர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. Skill-Lync இன் திட்டங்கள், மின் வாகனங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பது குறித்த நேரடி அனுபவத்தை மாணவர்களுக்கு அளிக்கும். அது மின் வாகனப் பொறியியலில் இருக்கும் திறன் இடைவெளியைக் குறைத்து, மாணவர்களின் திறனை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்தார்.
மின் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால், இந்த நிறுவனம் இதுபோன்ற மேலும் பல மின் வாகன முன்மாதிரிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின் வாகன கட்டுமான செயல்முறையை விளக்கும் வகையில் மாஸ்டர் கிளாஸ் காணொளிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்த Skill-Lync நிறுவனம் திட்டமிட்டுள்ளது.