சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

ஜூன் 5, 6: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வாடெக் அமெரிக்காவின் கோகோ கெளயை வீழ்த்திப் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடால் நார்வேயின் கஸ்பர் ரூடை வீழ்த்திப் பட்டம் வென்றார். இது நடால் வெல்லும் 14-வது பிரெஞ்சு பட்டம்.

ஜூன் 6: மத்திய அரசு திட்டமிட்டிருந்ததைவிட 5 மாதங்களுக்கு முன்பாகவே பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்கிற இலக்கு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 8: உணவுப் பாதுகாப்புத் துறை சார்ந்த செயல்பாடுகளில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாகத் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சம் தெரிவித்தது.

ஜூன் 8: ஒலிம்பிக் போட்டிகளைப் போல செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கும் முன்பு ஜோதி ஓட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக சர்வதேச செஸ் சம்மேளனம் தெரிவித்தது.

ஜூன் 9: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆண்டுகள் விளையாடியவர் மிதாலி ராஜ்.

ஜூன் 9: நாட்டின் 18ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜூன் 10: கர்நாடகம், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 8, காங்கிரஸ் 5, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சுயேச்சை தலா ஓரிடத்தில் வென்றன. முன்னதாக 11 மாநிலங்களில் 41 எம்.பி.க்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in