Published : 08 Jun 2022 04:10 PM
Last Updated : 08 Jun 2022 04:10 PM

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 17

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த திங்கள்கிழமை (ஜூன் 6) அன்று பகுதி - 16இல் ‘நடப்புச் செய்திகள் - 1’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘நமது இந்தியா - 5 (வரலாறு - அ)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

நமது இந்தியா - 5 (வரலாறு - அ)

1. கனிஷ்கர் சீனாவின் மீது படையெடுத்தபோது சீனத் தளபதி யார்?
அ) கிங்யாங் ஆ) பாஞ்ஞோ
இ) சுவாங் ஈ) கவிரி

2. குப்த யுகம் என யாருடைய காலத்தைக் குறிப்பிடுகிறார்கள்?
அ) முதலாம் சந்திர குப்தர்
ஆ) இரண்டாம் சந்திர குப்தர்
இ) சமுத்திர குப்தர்
ஈ) ஸ்கந்த குப்தர்

3. இரண்டாம் சந்திர குப்தர் சாகர்களை வென்று கைப்பற்றிய இடம் எது?
அ) காசி ஆ) டெல்லி
இ) உஜ்ஜயினி ஈ) குஜராத்

4. ‘காமரூபம்’ என்ற பகுதி தற்போது எந்த மாநிலத்தைக் குறிக்கிறது?
அ) மத்தியப் பிரதேசம் ஆ) உத்தரப் பிரதேசம்
இ) அசாம் ஈ) குஜராத்

5. தானேஸ்வரத்தை மாற்றி கன்னோசியைத் தலைநகராக் கொண்டு ஆட்சிசெய்தவர் யார்?
அ) முதலாம் சந்திர குப்தர்
ஆ) சந்திர குப்த மௌரியர்
இ) புஷ்யமித்திரர்
ஈ) ஹர்ஷர்

6. ஹர்ஷசரிதம், காதம்பரி ஆகிய நூல்களை எழுதிய பாணர் எந்த மொழியில் வல்லுநர்?
அ) ஹிந்தி ஆ) சம்ஸ்கிருதம்
இ) பாலி ஈ) அனைத்தும்

7. ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்த சீனப் பயணி யுவான்சுவாங் எழுதிய நூல் எது?
அ) இண்டிகா ஆ) பிரியதர்சிகா
இ) சியூக்கி ஈ) இவற்றில் ஏதும் இல்லை

8. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) வசுமித்திரர் - சாத்திரம்
ஆ) சரக்கா - மருத்துவம்
இ) எஜிலாஜீம் - கட்டடக்கலை
ஈ) அசுவகோஷர் - சமண அறிஞர்

9. கி.பி. 8 முதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட பிரதிகாரர்கள் எந்த மரபு வழி வந்தவர்கள்?
அ) கூர்ஜர்கள் ஆ) ஹுனர்கள்
இ) சாகர்கள் ஈ) குஷாணர்கள்

10. பிரதிகார மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
அ) ராஜ்பாலா
ஆ) முதலாம் நாக பட்டர்
இ) மிகிரபோசர்
ஈ) வத்ராசா

11. முகமது கஜினி முதன் முதலில் இந்தியாவின் மீது படையெடுத்தபோது எந்த ராஜபுத்திர மன்னர் வட இந்தியாவை ஆண்டுவந்தார்?
அ) ராஜ்பாலா
ஆ) முதலாம் நாக பட்டர்
இ) மகேந்திர பாலா
ஈ) இரண்டாம் நாக பட்டர்

12. எந்த வருடம் மன்னர் ஜெயச்சந்திரன் சந்தவார் போரில் முகமது கோரியுடன் போரிட்டுத் தோற்றார்?
அ) கி.பி. 1191 ஆ) கி.பி. 1192
இ) கி.பி. 1193 ஈ) கி.பி. 1199

13. பாலர் மரபினைத் தோற்றுவித்த கோபாலரின் மகன் தருமபாலருக்குக் கீழ்க்கண்ட எந்தத் தொடர் தொடர்பற்றது?
அ) விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்
ஆ) நாலந்தா பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்தவர்
இ) தருமபாலர் சமண மதத்தில் பற்றுடையவர்
ஈ) தருமபாலரின் மகன் தேவ பாலர்

14. கலிஞ்சர் கோட்டையை நிறுவியவர்கள் யார்?
அ) சிசோதியர்கள்
ஆ) சந்தேலர்கள்
இ) சௌகான்கள்
ஈ) ரத்தோர்கள்

15. எந்த வருடம் ராணா ரத்தன் சிங்கை அலாவுதீன் கில்ஜி தோற்கடித்தார்?
அ) 1301 ஆ) 1303
இ) 1305 ஈ) 1307

16. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ) கல்கானா - ராஜதரங்கனி
ஆ) ஜெயதேவர் - கீதகோவிந்தம்
இ) பாஸ்கராச்சார்யா - சித்தாந்த சிரோன்மணி
ஈ) சோமதேவர் - சங்கீத சரிதம்

17. பொருத்துக:
பகுதி ஆட்சியாளர்
A. அவந்தி - 1. தோமர்கள்
B. வங்காளம் - 2. பரமார்கள்
C. டெல்லி - 3. பிரதிகாரர்கள்
D. மாளவம் - 4. பாலர்கள்
அ) A-3, B-4, C-2, D-1 ஆ) A-4, B- 3, C-, 2, D- 1
இ) A-4, B-3, C-1, D-2 ஈ) A-1, B-2, C-3, D-4

18. பொருத்துக:
மன்னர் வம்சம்
A. யசோதவர்மன் - 1. சிசோதியர்
B. ஜெயச்சந்திரன் - 2. சௌகான்
C. பிருதிவிராஜ் - 3. ரத்தோர்
D. பாபாரவால் -4. சந்தேலர்கள்
அ) A-3, B-4, C-2, D-1 ஆ) A-4, B- 3, C-, 2, D- 1
இ) A-4, B-3, C-1, D-2 ஈ) A-1, B-2, C-3, D-4

19. சிசோதிய மரபில் ‘ஜவஹர்’ எனும் தீயில் குதித்து உயிரிழக்கும் வழக்கப்படி உயிர் நீத்த ராணி பத்மினியின் கணவர் பெயர் யாது?
அ) ராணா சங்கா
ஆ) மகாராணா பிரதாப்
இ) ராணா ரத்தன்சிங்
ஈ) பாபாரவால்

20. கீழ்க்கண்டவற்றுள் ராஜபுத்திரர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றுகள் எவை?
1. கஜுராஹோ ஆலயம்
2.புவனேஸ்வர் லிங்கராஜ் ஆலயம்
3. கோனார்க் சூரியகோவில்
4. அபு மலை தில்வாரா கோவில்
அ) அனைத்தும்
ஆ) 1, 2 , 3
இ) 1, 2 , 4
ஈ) 1, 3 , 4

பகுதி 16இல் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கான விடைகள்

1. இ. கோவா

2. ஆ. இந்தோனேசியா

3. அ. அனில் தார்கெர்

4. இ. கமல்ஹாசன் - தாதா சாகிப் பால்கே விருது (ரஜினி காந்த்)

5. ஈ. சீனா

6. ஆ. கேரளம்

7. இ. 140 (மொத்தம் 156)

8. இ. வங்கதேசம்

9. அ. ஏப்ரல் 2

10. ஈ. ஜம்மு & காஷ்மீர்

11. இ. ராஜஸ்தான் (சஞ்சீவி)

12. இ. ராஜஸ்தான்

13. ஆ. ஜெப் பெசோஸ் (அமேசான்)

14. அ. அசுதோஷ் பரத்வாஜ்

15. இ. ஏப்ரல் 10 (ஹானிமன் நினைவு)

16. ஆ. படகோட்டுதல்

17. ஆ. ஹரித்வார்

18. ஈ. பிரான்ஸ்

19. ஈ. தாய்லாந்து

20. அ. மனிதனின் விண்வெளிஒ பயணத் திட்டம்

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x