Last Updated : 24 May, 2022 07:45 AM

 

Published : 24 May 2022 07:45 AM
Last Updated : 24 May 2022 07:45 AM

சேதி தெரியுமா?

மே 14: உள்நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.

மே 15: திரிபுரா முதல்வர் பதவியிலிருந்து விப்லப் குமார் தேவ் விலகியதையடுத்து புதிய முதல்வராக மாணிக் சாஹா பதவியேற்றார்.

மே 16: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை 3-0 என்கிற கணக்கில் வீழ்த்தி இந்தியா வென்றது. 73 ஆண்டு கால வரலாற்றில் இந்தியா வெல்லும் முதல் கோப்பை இது.

மே 17: பிரிட்டனின் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் நிதிக்குழுவில் இந்தியப் பெண்ணும் பொருளாதார பேராசிரியருமான ஸ்வாதி திங்ரா இடம்பெற்றார்.

மே 18: உள்நாட்டு வடிவமைப்பில் உருவான ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். உதய்கிரி ஆகிய போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்து வைத்தார்.

மே 18: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை நீதிமன்றத்துக்கு இருக்கும் 142வது சட்டப் பிரிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

மே 19: பழமையான மும்பை பங்குச் சந்தையின் (பிஎஸ்இ) தலைவராக எஸ்.எஸ். முந்த்ரா நியமிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x