செயலி உலா: கணக்கை எளிதாக்கும் கூகுளின் சாக்ரடிக்

செயலி உலா: கணக்கை எளிதாக்கும் கூகுளின் சாக்ரடிக்
Updated on
1 min read

கணக்கு என்றால் தலைதெறிக்க ஓடுபவர்களையும் கவர்ந்திழுக்கும் எளிய செயலி இது. கணக்கில் கடினமானவையாகக் கருதப்படும் அல்ஜீப்ரா, முக்கோணவியல், நுண்கணிதம் போன்றவற்றை அந்த வகையில் இந்தச் செயலி எளிமையாக்கி உள்ளது. கணக்கு மட்டுமல்லாமல்; வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகியவற்றில் இருக்கும் சூத்திரங்களுக்கும் எளிதில் விடையளித்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. வெறும் விடையை மட்டும் அளிக்காமல், அதன் செயல்முறை விளக்கத்தையும் அளிப்பது இதன் சிறப்பம்சம். அதைப் பயன்படுத்தும் வழிமுறைகள்:

  • கூகுள் பிளேஸ்டோரிலிருந்து ‘சாக்ரடிக் பை கூகுள்’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
  • பின்னர் அந்த செயலியின் உள்ளே சென்று கீழ் நடுவில் உள்ள கேமிரா பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • அதன் பிறகு நீங்கள் விடைகாண நினைக்கும் கேள்விகளை ஒளிப்படம் எடுங்கள்.
  • கேள்வியை மட்டும் வெட்டியெடுத்து (crop) பின் Go என்கிற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • இப்பொழுது சில நொடிகளில் அதற்கான விடையை நீங்கள் விளக்கத்துடன் காண முடியும்.

கணித சூத்திரம் கண்டு விலகிச் செல்லும் மாணவர்களா நீங்கள், இந்தச் செயலியைப் பயன்படுத்திப் பாருங்கள். சூத்திரங்கள் உங்கள் விருப்ப பாடங்களாக மாறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in