

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி)குருப் 4 தேர்வு 2022 ஜூலை 24 அன்று நடத்தப்படவிருக்கிறது. இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர்,நில அளவர், வரைவாளர் ஆகிய ஏழு விதமான அரசுப் பணிகளுக்காக இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
குரூப்-4 தேர்வு எழுதத் தயாராகிவரும் போட்டியாளர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் `இந்து தமிழ் திசைக்காட்டி' இணைப்பிதழின் இணையப் பக்கத்தில் மே 2 அன்று வினா-விடை தொடர் தொடங்கப் பட்டுள்ளது. அனுபவம்மிக்க போட்டித் தேர்வு பயிற்சியாளரும் குளோபல் விக்கிமாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன் இந்தத்தொடருக்கான வினா, விடைகளைத் தொகுத்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தொடரின் புதிய பகுதிகள் வெளியாகும். இந்தத் தொடரில் கேட்கப்படும் வினா, விடைகளைக் கொண்டு குரூப்-4 தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க மாணவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளமுடியும்.
இதைத் தவிர ‘திசைகாட்டி’ இணையப் பக்கத்தில் தமிழ்நாடு, தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகள் குறித்த தகவல் தொகுப்புகள் வெளியிடப் படுகின்றன. குரூப்-4 தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்களுக்கு இந்தத் தொகுப்புகளும் உதவிகரமாக இருக்கும்.
திசைகாட்டி இணைப்பிதழின் இணையதளப் பக்கம்: https://bit.ly/3P0qak1