டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- பகுதி 4

டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு- பகுதி 4
Updated on
2 min read

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) அன்று வெளியிடப்பட்ட பகுதி-3இல் ‘இந்தியா-1 (குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)’ என்னும் தலைப்பின் கீழ் 15 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். அதே தலைப்பின்கீழ் அடுத்த 15 வினாக்கள் :-

இந்தியா-1
(குடியரசுத் தலைவர்கள், துணைக்குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள்)

16. சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த முதல் இந்தியர் யார்?

அ) வல்லபபாய் படேல்

ஆ) சி. ராஜகோபாலாச்சாரி

இ) மவுன்ட் பேட்டன் பிரபு

ஈ) ராஜேந்திர பிரசாத்

17. ஐ.கே. குஜ்ரால் தனது பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்தபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் யார்?

அ) நரசிம்ம ராவ்

ஆ) பிரம்மானந்த ரெட்டி

இ) சீத்தாராம் கேசரி

ஈ) விஜய பாஸ்கர் ரெட்டி

18. இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத வேறு கட்சி சார்ந்து மூன்று முறை பதவி வகித்த பிரதமர் யார்?

அ) வி.பி.சிங்

ஆ) நரேந்திர மோடி

இ) அ.பி.வாஜ்பாய்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

19. இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக செயல்பட்டு பின்னர் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தவர் யார்?

அ) ஐ.கே.குஜ்ரால்

ஆ) மன்மோகன் சிங்
இ)
வி.பி.சிங்

ஈ) முகமது இதயத்துல்லா

20. இந்தியாவில் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆதரவில் வெற்றி பெற்று பிரதமராக பதவி வகித்தவர் யார்?

அ) மொரார்ஜி தேசாய்

ஆ) தேவ கௌடா

இ) சந்திரசேகர்

ஈ) ஐ.கே.குஜ்ரால்

21. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?

அ) பிரதீபா பாட்டில்

ஆ) இந்திரா காந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

22. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பெயர் யாது?

அ) பிரதீபா பாட்டில்
ஆ) இந்திராகாந்தி

இ) சோனியா காந்தி

ஈ) கமலா நேரு

23. அணிசேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி
இ) இந்திராகாந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

24. ஆண்டுதோறும் செம்டம்பர் ஐந்தாம் நாள் யாருடைய நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

25. ஆண்டுதோறும் நவம்பர் பதினான்காம் நாள் யாருடைய நினைவாக குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகிறது?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) ராதாகிருஷ்ணன்

இ) ஜாகீர் உசேன்

ஈ) மதன் மோகன் மாளவியா

26. எந்த ஆண்டு ஏவுகணை மனிதன் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

அ) 1995
ஆ) 1996

இ) 1997
ஈ) 1998


27. 1963 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்று பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) ஜாகீர் உசேன்

ஆ) ஜெயில் சிங்

இ) சங்கர் தயாள் சர்மா

ஈ) அ.ப.ஜெ.அப்துல் கலாம்

28. சிறப்பு வாய்ந்த தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியப் பிரதமர் யார்?

அ) ஜவாஹர்லால் நேரு

ஆ) லால்பகதூர் சாஸ்திரி

இ) இந்திரா காந்தி

ஈ) மொரார்ஜி தேசாய்

29. ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதல்வராக இருந்து பின்னர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?

அ) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

ஆ) நீலம் சஞ்சீவி ரெட்டி

இ) வி.வி.கிரி

ஈ) வெங்கையா நாயுடு

30. இந்தியாவில் மைனாரிட்டி அரசுடன் ஐந்தாண்டு பதவிக் காலம் முழுமைக்கும் (அடுத்த பொதுத்தேர்தல் வரை) பிரதமராக இருந்தவர் யார்?

அ) இந்திரா காந்தி

ஆ) மொரார்ஜி தேசாய்

இ) நரசிம்ம ராவ்

ஈ) வி.பி.சிங்

கடந்த பகுதியில் இடம்பெற்ற வினாக்களுக்கான விடைகள்:-

1. அ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்

2. ஆ. R. K. சண்முகம் செட்டியார்

3. இ. மொரார்ஜி தேசாய்

4. ஈ. சரண் சிங்

5. அ. குல்ஜாரிலால் நந்தா

6. இ. அ.பி. வாஜ்பாய்

7. இ. ராஜீவ் காந்தி

8. ஈ. அ.பி. வாஜ்பாய்

9. அ. சர்தார் வல்லபபாய் படேல்

10. இ. பக்ருதீன் அலி அகமது

11. அ. குல்ஜாரிலால் நந்தா

12. அ. சர்தார் வல்லபபாய் படேல்

13. ஆ. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்

14. ஈ. முகம்மது இதயத்துல்லா

15. இ. மவுண்ட் பேட்டன் பிரபு

தொகுப்பு: ஜி.கோபாலகிருஷ்ணன், போட்டித்தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in