

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) குருப் 4 தேர்வுகள் 2022 ஜூலை 24 அன்று நடத்தப்படவிருக்கிறது. இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , சுருக்கெழுத்து தட்டச்சர் , கிராம நிர்வாக அலுவலர் , வரித் தண்டலர் , நில அளவர், வரைவாளர் ஆகிய ஏழு விதமான அரசுப் பணிகளுக்கான இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன,.
வரவிருக்கும் குரூப்-4 தேர்வு மட்டுமல்லாமல் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்கள் முறையான திருப்புதலுக்கு - கொள்குறி வகை வினாக்களுக்கு விடையளிக்க தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள உதவும் வகையில் இந்தப் பகுதியில் கொள்குறி வினா-விடைகள் தொகுத்துத் தரப்படுகின்றன. அனுபவம் மிக்க போட்டித் தேர்வு பயிற்சியாளரும் குளோபல் விக்கிமாஸ்டருமான ஜி.கோபாலகிருஷ்ணன் ’திசைகாட்டி’ வாசகர்களுக்காகவும் குரூப்-4 தேர்வை எதிர்கொள்ளத் தயராகிவரும் மாணவர்களுக்காகவும் இந்த வினாக்களையும் விடைகளையும் தொகுத்துள்ளார்.
நீங்கள், ஒவ்வொரு கொள்குறி வினாவுக்கும் உங்களது விடையை ஒரு தாளில் குறித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் சரியான விடைகளை வைத்து நீங்களே உங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்.
நமது இந்தியா, தமிழ்நாடு, பொது, நடப்பு நிகழ்வுகள், கணிதம் மற்றும் நுண்ணறிவு போன்ற தலைப்புகளில் வினாக்கள் தொகுக்கப்பட்டிருக்கும்.
வரும் திங்கள் (மே 2) தொடங்கி ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன். வெள்ளி ஆகிய மூன்று நாள்களுக்கு இந்த வினாக்களும் விடைகளும் பகுதி பகுதியாக அளிக்கப்படும். இப்பகுதியை தவறாது படித்து உங்கள் திறமையை மேலும் உயர்த்திக்கொண்டு நடைபெற இருக்கின்ற தேர்வுகளில் வெற்றி பெற்று ஒரு நல்ல பதவியில் அமர எங்களது மனமார வாழ்த்துக்களுடன் இப்பகுதியை துவக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.