

ஏப்.13: சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஏப்.14: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வைத்த தேநீர் விருந்தை ஆளுங்கட்சியான திமுக புறக்கணித்தது.
ஏப். 15: ஐஸ்லாந்தில் நடைபெற்ற ரெய்க்ஜாவிக் ஓபன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
ஏப். 18: டெல்லி தீன் மூர்த்தி வளாகத்தில் ‘பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா’ என்கிற அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இங்கு இந்தியாவின் முதல் பிரதமர் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களின் பதவிக் காலம் ஞாபகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்.19: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழந்துள்ளன என்று யானைகள் இறப்பு குறித்து அமைக்கப்பட்ட குழு அறிக்கை சமர்பித்தது.
ஏப்.20: டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சஜன் பிரகாஷ் 200 மீ. பட்டர்ஃபிளை பிரிவில் தங்கப் பதக்கமும் 1500 மீ. ஃப்ரீஸ்டைல் பிரிவில் 16 வயதான வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.