சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

ஏப்.7: தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ஏப்.8: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு ஐ.நா. பொதுச் சபை ஒப்புதல் அளித்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் கிடைத்தன. இந்தியா உட்பட 58 நாடுகள் வாக்களிக்கவில்லை.

ஏப்.8: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.

ஏப்.9: தாய்லாந்தின் புக்கெட் நகரில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை ஓபன் தொடரில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றது.

ஏப்.10: கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பள்ளிக்கல் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பாவுடனும் கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோஷலுடனும் இணைந்து பட்டம் வென்றார். உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா முதன் முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏப்.11: இந்தியாவில் காய்கறி உற்பத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இதேபோலப் பழங்கள் உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஏப்.12: மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABH) புதிய தலைவராக டாக்டர் மகேஷ் வர்மா நியமிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in