Last Updated : 26 Oct, 2021 03:06 AM

 

Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

சேதி தெரியுமா?

அக்.16: உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101ஆவது இடத்தில் உள்ளது. 2020இல் 91-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இப்பட்டியலில் 116 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அக்.16: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலுக்கு (2022-2024 வரை) இந்தியா மீண்டும் தேர்வானது. 193 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 184 வாக்குகளை இந்தியா பெற்றது.

அக்.17, 18: 16 நாட்டு அணிகள் பங்கேற்கும் ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் தொடங்கியது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் குர்டிஸ் கேம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

அக்.18: கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தித் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்தது.

அக்.19: மணிப்பூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஹாரியட் மலையை ‘மணிப்பூர் மலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவுசெய்தது.

அக்.19: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் முதல் டோஸ் செலுத்திய மாநிலம் என்கிற பெருமையை உத்தரகாண்ட் பெற்றது.

அக்.19: விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்கிற பெருமையைப் பெற்ற ‘சேலஞ்ச்’ படத்தில் பணியாற்றிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த குழுவினர் சோயுஸ் எம்.எஸ்-19 விண்கலம் மூலம் பூமியை வந்தடைந்தனர்.

அக்.21: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கிய கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், 100 கோடி டோஸ் என்கிற நிலையை எட்டியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x