சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

ஆக. 28: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாபின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் அவர் நியமிக்கப் பட்டுள்ளார்.

ஆக. 28: பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்துவைக்கப்பட்டது.

ஆக. 30: கரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்குப் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்தது.

ஆக. 31: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறின.

செப். 2: பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

செப். 3: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எம். அப்துல்லா போட்டியின்றித் தேர்வானார். மாநிலங்களவையில் திமுகவின் பலம் எட்டாக அதிகரித்தது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் மகளிர் ஆர் 2 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அவனி லேகாரா, தடகளம் ஆடவர் எஃப் 64 ஈட்டி எறிதல் பிரிவில் சுமித் அண்டில், துப்பாக்கிச் சுடுதல் கலப்பு பி4 50 மீ. பிஸ்டல் பிரிவில் மனீஷ் நர்வால், பேட்மிண்ட்டனில் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் ஆகியோர் தங்கப் பதக்கமும்; ஆடவர் டி63 உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவர் டி47 உயரம் தாண்டுலில் நிஷாத் குமார், ஆடவர் எஃப்56 வட்டெறிதலில் யோகேஷ் கதுனியா, ஆடவர் எஃப்46 ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, ஆடவர் டி64 உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார், துப்பாக்கிச் சுடுதல் எஸ்.ஹெச்.1 கலப்பு 50 மீ. பிரிவில் சிங்ராஜ் அதனா ஆகியோர் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in