Last Updated : 20 Jul, 2021 10:09 AM

 

Published : 20 Jul 2021 10:09 AM
Last Updated : 20 Jul 2021 10:09 AM

சேதி தெரியுமா?

ஜூலை 9: கரீபியன் பெருங் கடலில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனேல் மாய்ஸும் அவருடைய மனைவியும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டனர்.

ஜூலை 9: டெல்டா பிளஸ் கரோனா வகையைவிட அபாயகரமான ‘லம்படா’ வகை 30 நாடுகளில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11: இந்தியாவின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத் தலைநகர் திருவனந்த புரத்தில் தொடங்கப்பட்டது.

ஜூலை 11: கோபா-அமெரிக்கக் கால்பந்துப் போட்டியின் இறுதி யாட்டத்தில் பிரேசில் அணியை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றது.

ஜூலை 11, 12: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் பட்டத்தை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டியும் ஆடவர் பட்டத்தை செர்பியாவின் ஜோகோவிச்சும் வென்றனர்.

ஜூலை 12: லண்டனில் நடைபெற்ற யூரோ கால்பந்து கோப்பையின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி கோப்பையை வென்றது.

ஜூலை 14: இதுவரை 431 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறார் கிறிஸ் கெய்ல்.

ஜூலை 14: 1983 இல் இந்தியா உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்த கிரிகெட் வீரர்களில் ஒருவரான யஷ்பால் ஷர்மா (66) காலமானார்.

ஜூலை 15: நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையைத் தாக்கல் செய்தது.

ஜூலை 16: மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலை மையில் அனைத்துக் கட்சிக்குழு டெல்லியில் நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தைச் சந்தித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x