Last Updated : 29 Jun, 2021 10:09 AM

 

Published : 29 Jun 2021 10:09 AM
Last Updated : 29 Jun 2021 10:09 AM

சேதி தெரியுமா?

கோப்புப்படம்

ஜூன் 18: நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேசத்தில் கரோனாவிலிருந்து மீண்டவருக்குப் பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இது ‘அஸ்பெர்ஜில்லோசிஸ்’ தொற்று வகை.

ஜூன் 18: இந்தியத் தடகள ஜாம்பவான், ‘பறக்கும் சீக்கியர்’ எனப்பட்ட மில்கா சிங் (92) கரோனா தொற்றால் காலமானார்.

ஜூன் 19: நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் சீரான மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் நடை முறையை அறிமுகம் செய்வதற்கான அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது.

ஜூன் 20: ஐ.நா. பொதுச்செயலாளராக அன்டோனியா குட்டெரஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார். அவருடைய இரண்டாம் பதவிக் காலம் 2022 ஜனவரி 1இல் தொடங்குகிறது.

ஜூன் 21: தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.

ஜூன் 22: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த பொருளாதார அறிஞர்களான எஸ்தர் டப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ழீன் தெரசே, எஸ். நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

ஜூன் 23: ஐசிசி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை எட்டு விக்கெட் வித்தி யாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வென்றது.

ஜூன் 24: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு அனைத்து அரசியல் கட்சிகளுடன் முதன்முறையாகப் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

ஜூன் 24: ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்கிற பெருமையை நியூசிலாந்தைச் சேர்ந்த லாரல் ஹப்பார்ட் (பளுதூக்கும் பிரிவு) பெற உள்ளார்.

ஜூன் 25: கரோனா வேற்றுருவ டெல்டா பிளஸ் வகை 87 நாடுகளில் கண்டறியப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x