Published : 01 Dec 2020 05:31 PM
Last Updated : 01 Dec 2020 05:31 PM

சேதி தெரியுமா? 

நவ.20: இங்கிலாந்து கிரிக்கெட் அணி 16 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் 2021-ம் ஆண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

நவ.21: இந்தியாவில் 2021-ம் ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 17 வயதுக்கு உள்பட்ட மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு ரத்துசெய்தது. அந்தப் போட்டி 2022-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.23: அசாம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் (87) காலமானார். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதிலிருந்து மீண்டபோதும் கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளால் காலமானார். அசாம் மாநிலத்தில் 2001-ம் ஆண்டு முதல் 2016 வரை முதல்வர் பொறுப்பில் இருந்தவர் தருண் கோகோய். அசாமில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவரும் இவரே.

நவ.25: வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது 80 - 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல் பாதிப்பில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

நவ.25: தேவைப்பட்டால் இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. டிசம்பர் 1 முதல் பின்பற்றக்கூடிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் மத்திய அரசு இதைத் தெரிவித்துள்ளது.

நவ.25: அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், கால்பந்தாட்ட ஜாம்பவானுமான டியகோ மரடோனா (60) மாரடைப்பால் காலமானார். அர்ஜென்டினா அணிக்காக 1986-ல் உலக கோப்பையை வென்றுகொடுத்தவர் மரடோனா. ‘நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்' என்ற விருதை பீலேவுடன் பகிர்ந்துகொண்டவர் மரடோனா.

நவ.27: உயர் சிறப்பு, மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x