சேதி தெரியுமா? - புது நோட்டு அச்சாகவில்லை

சேதி தெரியுமா? - புது நோட்டு அச்சாகவில்லை
Updated on
1 min read

தொகுப்பு: திரு

ஆக.27: புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 23.3 சதவீதம் ரூபாய் நோட்டு விநியோகம் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்இட ஒதுக்கீடு செல்லும்!

ஆக.27: தலித்களுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்றும், இவ்வாறு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கியது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள சி.எஸ்.கே. அணி

ஆக.28: துபாயில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். தொடரில் பங்கெடுக்கச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கும் உதவியாளருக்கும் நடத்தப்பட்ட கோவிட் 19 பரிசோதனையில் 13 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில், சி.எஸ்.கே. அணி, உதவியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுளனர்.

ஜப்பான் பிரதமர் ராஜினாமா

ஆக.28: ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்துவரும் ஷின்ஸோ அபே, உடல்நிலையை கருத்தில் கொண்டு தன்னுடைய ராஜினாமாவை அறிவித்தார்.

மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் மரணம்

ஆக.28: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மரணம் அடைந்தார். வசந்தகுமார் இரண்டு முறை சட்டசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான குமரி அனந்தன் இவருடைய அண்ணன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in