

கல்வியாக இருந்தாலும் சரி இசை, நாட்டியம் முதலான கலையாக இருந்தாலும் சரி கற்றுக்கொள்பவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே. `ஆசிரியர்களின் பெருமையை ஒரு மாணவியே பாட்டாகப் பாடினால் எவ்வளவு இனிமையாக இருக்கும்..’ என்னும் கற்பனையை, நிஜத்தில் நிறைவேற்றியிருக்கிறார் `மியூசிக் டிராப்ஸ்’ அமைப்பை நடத்திவரும் ராஜபாளையம் உமாசங்கர்.
`மியூசிக் டிராப்ஸ்’ அமைப்பின் வழியாக மாணவர்களுக்கு இசையை அறிமுகப்படுத்திப் பாடுவதற்குப் பயிற்சியளித்து, உரிய முறையில் பாடவைத்து யூடியூபில் பதிவேற்றிவருகிறார் உமாசங்கர்.
சங்க இலக்கியங்களான குறுந்தொகைப் பாடல்கள், கம்பராமாயணப் பாடல்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து மாணவர்களை பாடவைத்துள்ள அவர், இந்த முறை ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியான யாழ் நங்கையை `கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் கொண்டவர்… நாம் கல்வி பெற சொல்லித் தர வந்தவர்’ என்னும் பாடலைப் பாடவைத்து யூடியூபில் பதிவேற்றியிருக்கிறார். இந்தப் பாடைல கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் எழுத, உமாசங்கர் மெட்டமைக்க, தினேஷ்பாபு இசையமைத்திருக்கிறார்.
பாடல் ஒலிக்கும் போதே, தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் தங்களின் சிறப்பான அணுகுமுறையால் கவனத்தை ஈர்த்திருக்கும் 26 ஆசிரியர்களின் ஒளிப்படங்களுடன் அவர்களின் தனித்திறன்களையும் வெளிப்படுத்தி, மாண்புமிக்க ஆசிரியர்களாக்கி கௌரவப்படுத்தியுள்ளார்.
இந்தப் பாடலைக் காண
இணையச் சுட்டி: https://bit.ly/2Gazenp