

ஆக.26: தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் முன்னிலையில் சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஆக.29: தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில், கம்போடியா தலைவருடன் தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா ஜூன் மாதத்தில் தொலைபேசியில் உரையாடல் கசிந்ததால், பிரதமர் பதவியிலிருந்து அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது.
ஆக.30: முதலீடுகளை ஈர்ப்பதற்காக 7 நாள்கள் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.
ஆக.30: சென்னையில் முதல் முறையாக நிகழ்ந்த மேக வெடிப்பால் நகரில் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.
ஆக.30: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அதிபர் ட்ரம்ப் விதித்த வரிகள் சட்ட விரோதமானவை என்று அந்நாட்டு மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆக.31: தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் பதவியேற்றார்.
ஆக.31: 29ஆவது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - ஷிராக் ஷெட்டி இணை வெண்கலம் வென்றது.
ஆக.31 டெல்லியில் நடைபெற்ற 16ஆவது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 50 தங்கம் உள்பட 99 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.