

‘நானும் ஒரு யூடியூபர்’ என வீட்டுக்கு ஒருவர் சமூக ஊடகங்களில் களம் காணத்தொடங்கிவிட்டார்கள். யூடியூப் அலைவரிசையைத் தொடங்குவது என்னவோ சுலபம்தான். ஆனால், அதை வெற்றிகரமாக நிர்வகிப்பது சவாலான காரியம். டிஜிட்டல் தரவுகளை ‘ஹேக்’ செய்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம், ‘பிஷிங்’ (Phishing) செய்வதைப் பற்றித் தெரியுமா?
அதென்ன பிஷிங்? - நீங்கள் ஒரு யூடியூப் அலைவரிசையை நிர்வகித்து வருகிறீர்கள். உங்களுடைய யூடியூப் கணக்கில் சேமிக்கப்படும் தரவுகள், கடவுச்சொல் போன்றவற்றை முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமாகக் களவாடினால் அது ‘ஹேக்கிங்’. தரவுகள் ‘ஹேக்’ செய்யப்படுவதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பிரச்சினை வரும்போதுதான் ‘ஹேக்’ செய்யப்பட்டதை உங்களால் உணர முடியும்.