Last Updated : 10 Jun, 2025 03:21 PM

 

Published : 10 Jun 2025 03:21 PM
Last Updated : 10 Jun 2025 03:21 PM

நார்வே செஸ் போட்டி முதல் பிரெஞ்சு ஓபன் வரை: சேதி தெரியுமா? @ ஜூன் 3- 9

ஜூன் 3: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற பணம் வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளுக்கு தமிழக அரசு கொண்டு வந்த விதிமுறைகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜூன் 3: அகமதாபாத்தில் நடைபெற்ற பதினெட்டாவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணி வென்ற முதல் ஐபிஎல் கோப்பை இது.

ஜூன் 4: ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்சிபி) அணியினருக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

ஜூன்5: ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றி விழாவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜூன் 6: ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜூன் 7: ஆபரேசன் சிலந்தி வலை தாக்குதலுக்குப் பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்கள், 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

ஜூன் 7: முன்னணியில் உள்ள 6 வீரர்கள் மட்டும் பங்கேற்ற நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஏழாவது முறையாகப் பட்டம் வென்றார்.

ஜூன் 8: தைவான் ஓபன் சர்வதேச தடகளப் போட்டியில் இந்திய வீராங்கனை வித்யா ராமராஜ் 400 மீ. தடை ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

ஜூன் 8: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் தொழிலதிபர் எலான் மஸ்கிற்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், எலான் மஸ்க் ‘தி அமெரிக்கா பார்ட்டி’ என்கிற கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

ஜூன் 9: சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோவில் கலவரம் ஏற்பட்டது.

ஜூன் 9: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x