சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
1 min read

ஆக. 2: இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆக.5: வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்கள் கலவரமாக வெடித்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஆக.6: பரஸ்பரம் விவாகரத்து கோரும் தம்பதிக்கு 6 மாதங்கள் கட்டாயக் காத்திருப்பு தேவையில்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆக.7: இறுதிப் போட்டிக்கு முன்னதாக உடல் எடை 100 கிராம் அதிகரித்ததால், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதனுக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆக.8: நாற்பது திருத்தங்களுடன் கூடிய வக்ஃப் வாரியச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு இதை அனுப்ப மத்திய அரசு பரிந்துரைத்தது.

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) உடல் நலக் குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.

சர்வதேச மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகட் அறிவித்தார்.

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி
வெண்கலம் வென்றது. இதன்மூலம் 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீ. தொலைவுக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in