ஆங்கிலம் அறிவோமே 4.0: 82 - ‘Blunder Mistake’ செய்ததுண்டா?

ஆங்கிலம் அறிவோமே 4.0: 82 - ‘Blunder Mistake’ செய்ததுண்டா?

Published on

‘Overwhelm’ என்பது போல, ‘underwhelm’ என்றும் ஒரு சொல் உள்ளதா? - ஆம், உள்ளது. ‘Overwhelmed’ என்றால், ஆழ்ந்த உணர்ச்சிக்கு உள்ளாகுதல். திகைப்பில் மூழ்கி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்பது. ‘I am overwhelmed by the love of my fans’. பெரும்பாலும் அன்பு, மகிழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்படுகிறது என்றாலும், சில நேரம் பெரும் சந்தேகம், அச்சம் காரணமாகவும் இந்த நிலை உண்டாகி பதற்றத்தை ஏற்படுத்தலாம்.

‘Underwhelmed’ என்பது ஒருவரால் அல்லது ஒரு சூழலால் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாவது. ‘The book left me a little underwhelmed’ என்றால், அந்தப் புத்தகம் உங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை என்று பொருள்.

'Mistake’, ‘blunder’ இரண்டும் ஒன்றா? - ‘Mistake' என்பது 'தவறு’. ‘Blunder' என்பது 'சங்கடத்தை உண்டாக்கும் தவறு’. போதிய முன்யோசனை இல்லாததால் ஏற்படுவது. உங்களுக்கு ஒரு வரிசையில் ஐந்தாவது இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த வரிசையின் நான்காவது இருக்கையில் உட்கார்ந்தால், அது ‘mistake’. மாறாக, நான்காவது இருக்கையில் உட்கார்ந்திருப்பவரிடம், "இது உங்கள் இடம் அல்ல. என்னுடையது” என்று கூறி அவரை எழுப்பிவிட்டால் நீங்கள் செய்தது ‘blunder’.

‘Epigram’, ‘epitaph’ ஆகிய இரண்டும் ஒன்றா? - ‘எபிகிராம்' என்பது அதிக வார்த்தைகள் கொண்டதாக இருக்காது. வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். அவ்வப்போது பிறரால் மேற்கோ ளாகக் காட்டப்படும். பழமொழிக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்ன வென்றால், ‘எபிகிராம்’ என்பதைக் கூறியவர் யார் என்பதும் அறியப்படும். (பழமொழிகளை முதலில் உதித்தவர் யார் என்பது பொதுவாகத் தெரியாது).

‘இருளை இகழ்வதைவிட ஒரு மெழுகுவத்தியை ஏற்றுவது மேலானது’ என்கிற எபிகிராமைக் கூறும்போது அதைக் கூறியவர் ரூஸ்வெல்ட் என்பதும் அறியப்படும்.

எபிகிராம் - சில எடுத்துக்காட்டுகள். ‘There is only one thing in the world worse than being talked about, and that is not being talked about’ - (Oscar Wilde). ‘Child is the father of man’ - (John Wordsworth). ‘If we don’t end war, war will end us’ – (H.G.Wells).

கல்லறையில் பொறிக்கப்படும் வார்த்தைகளை ‘epitaph’ என்பார்கள். கல்லறைக் கல்வெட்டு. இறந்தவர் களைப் பற்றி அவர் நினைவாக உரையாற்றும்போது வெளிப்படுவதையும் ‘epitaph’ என்பதுண்டு. ‘A light from our life is gone’. ‘A voice we loved, stilled’. ‘A place vacant in our hearts’. ‘A place never to be filled’ என்பதுபோல் உணர்ச்சிப் பிழம்பாகவும் அது அமையலாம். ‘Serendipity’ என்பது போல் ஒரே வார்த்தை அங்கத மாகவும் அது இருக்கலாம்.

‘He is a ‘nagging person’ என்று ஒருவரைக் குறிப்பிட்டால் அதற்கு என்ன பொருள்? - அவர் தொணதொணவென்று எதையாவது பேசிக்கொண்டிருப்பவர் அல்லது எதைப் பற்றியாவது புகார் சொல்லிக்கொண்டே இருப்பவர். நீண்ட காலத்துக்கு ஓர் அசௌகரியமான உணர்வை கொடுத்துகொண்டே இருப்பதை உணர்த்த ‘nagging’ என்கிற சொல்லைப் பயன்படுத்துவதும் உண்டு. ‘Nagging doubts’. ‘A nagging voice inside me’.

யாரோ உங்களைப் பின்தொடர்வது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை ‘nagging doubt’ எனலாம். எனக்கும் சில ‘nagging questions’ உண்டு. திரைப்பாடல்களை இணையதளத்தில் ஒலி அல்லது ஒளி வடிவில் கேட்கும் வசதி இருக்கும்போது மெல்லிசை நிகழ்ச்சிகளில் பிறர் பாடுவதைக் கேட்கப் பலரும் ஆர்வம் காட்டுவது ஏன்? பாடல்களைக் கேட்க விரும்பும் பலரும் ஓடிடி தளத்தில் திரைப்படங்களைப் பார்க்கும்போது பாடல் காட்சிகளைத் தாண்டிச் செல்வது ஏன்?

# ‘Kickback’ என்றால்? - லஞ்சம்.

# ‘Geriatric patient’ என்றால்? - வயது முதிர்ந்த நோயாளி.

# ‘Bore’ அடிக்கிறது என்கிறோமே, அதன் ‘noun' வடிவம் என்ன? - ‘Boredom’

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in