ஆங்கிலம் அறிவோமே 4.0 - 81: ‘Shoe', ‘boot’ - வித்தியாசம் என்ன?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 81: ‘Shoe', ‘boot’ - வித்தியாசம் என்ன?
Updated on
2 min read

‘Shoe', ‘boot’ -இரண்டும் ஒன்றா? - இரண்டுமே பாதங்களை மறைப்பது தான். ஆனால், பொதுவாக 'ஷூ’க்கள் கணுக்கால்களை மறைப்பதில்லை. ‘Boot’ என்பது கணுக்கால்களை மறைக்கும். ‘Slippers’, ‘sandals’ ஆகியவற்றின் வேறுபாட்டையும் அறிந்துகொள்வோம். பாதங்களில் ஏதேனும் பாதிப்பிருந்தால் அல்லது நீரிழிவு நோய் கொண்ட வர்கள்தான் பெரும்பாலும் வீட்டுக்குள் காலணிகளை அணிகிறார்கள்.

ஆனால், குளிர் பிரதேசங்களில் வீட்டுக்குள் காலணி கள் அணிவது வழக்கம். அதற்குப் பயன் படுத்தப்படும் காலணிகளை ‘slippers’ என்பார்கள். ‘Sandals’ என்பது பொது வாக வெளியில் செல்லும்போது அணி வது. இதில் ‘buckles’, ‘straps’ இருக்கும்.

கடிதத்தின் இறுதியில் ‘with regards, thanking you’ இரண்டும் எழுதலாமா? - கடிதத்தில் ‘with regards' என்பதைத் தொடர்வது ‘comma'வா? ‘Full-stop'ஆ? இரண்டும் எழுதத் தேவையில்லை. ‘with regards, thanking you’ இதில் ஏதாவது ஒன்று போதும். ‘Regards.’ என்று மட்டுமே எழுதினால் முற்றுப்புள்ளி. ‘With regards,’ என்பதைத் தொடர்வது கால் புள்ளி.

ஒருவரைச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்தால், அவரை ‘outcast’ என்கிறார்களா? ‘Outcaste’ என்கிறார்களா? - ‘Caste’ என்பது சாதியைக் குறிக்கிறது. ‘Cast?’. கலைப் படைப்பில் (நாடகம், திரைப்படம் போல) நடிப்பவர்களை ‘cast’ என்பதுண்டு. ‘Supporting cast’ என்பதைக் (துணை நடிகர்கள்) கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘Cast’ என்பதை ஒரு குறிப்பிட்ட திசையில் ஒளியை அல்லது நிழலை அனுப்புதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

‘The moon cast a white light into the house.’, ‘The tree cast a shadow over her face.’ வாக்களிப்பது என்கிற அர்த்தத்திலும் ‘cast’ பயன்படுகிறது. ‘Cast your vote.’ ‘Outcast’ என்பவர் சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர். ‘Caste’ என்பதி லிருந்து பிறந்திருக்க வாய்ப்புண்டு என்றாலும் அந்தச் சொல்லுக்கான எழுத்துகள் ‘Outcast’ என்பதுதான்.

‘No frills' என்றால்? - புடவை அணியும்போது காணப்படும் மடிப்புகளை ‘frills’ என்பார்கள். திரைச்சீலைகளில் காணப்படும் மடிப்புகளையும் இப்படிக் குறிப்பிடுவார்கள். என்றாலும், தேவையைத் தாண்டிய ஒன்றை (பகட்டு என்பது போல) ‘frills’ எனலாம்.

சாதம், சாம்பார், காய்கறிகள், மோர் ஆகியவை மட்டும் அமைந்ததை ‘plain simple meal no frills’ என்றழைக்கப்படுகிறது. அதாவது ‘பசிக்குச் சாப்பிட வேண்டும், அவ்வளவுதான். எதற்காக விதவிதமான வகைகள்?’ என்று கேட்பதைப் போன்றதொரு ‘மெனு’. இந்த வகை உணவு வகைகளை வழங்கும் உணவகத்தை ‘no frills restaurant’ என்கிறார்கள்.

‘No frills shop’ என்றால் அடிப்படையாகத் தேவைப்படும் பொருள்கள் மட்டும் விற்பனை செய்யப்படும் இடம். ஒரு ‘supermarket’ போல பலவிதப் பொருள்கள் இதில் விற்பனை செய்யப்பட மாட்டாது. ‘No frills airline’ என்பதில் விமானக் கட்டணம் குறைவாக இருக்கும். ஆனால், உணவு வழங்கப்பட மாட்டாது. தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். கையில் ஒரு சிறு பையை மட்டும் எடுத்துச் செல்லலாம். கூடுதலாக எடுத்துச் செல்லப்படும் ஒவ்வொரு பெட்டிக்கும் பணம் செலுத்த வேண்டும்.

சி|ப்|ஸ்

‘Kennel’ என்பது? - நாயின் வீடு
‘Smitten with beauty’ என்பது எதைக் குறிக்கிறது? - மிக அதிகமாக விரும்புவதை ‘smitten’ என்பார்கள்.
பேப்பரைக் கசக்கிப் போடுவதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்? - ‘Crumple the paper’

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in