

‘இயர் புக்' என்பதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன? கல்வி, மருத்துவம், அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றின் நகர்வுகளே. ஓராண்டில் அறிந்துகொள்ள வேண்டிய ஆளுமைகள், நாடுகள், நகரங்கள், உலகளாவிய நடப்புகள், நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு. ஆங்கிலம் தொடங்கி அனைத்து மொழிகளிலும் ‘இயர் புக்'குகள் ஆண்டுதோறும் பல குழுமங்களால் வெளியிடப்படுகின்றன.
நிகழ்வுகளின் தொகுப்பு வெறும் செய்திக் கோவையாக, புள்ளிவிவரங்களின் தொகுப்பாக இருந்தால், ஆசைக்கு வாங்கிச் சில பக்கங்கள் படித்துவிட்டு அடுக்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால், தொடர்ந்து படிக்க முடியாது, சலிப்புத் தட்டும். போட்டித் தேர்வுகளுக்கு மூச்சைப் பிடித்துக்கொண்டு மனப்பாடம் செய்பவர்கள் வேண்டுமென்றால் முழுவது மாக வாசிக்க முயன்று பார்க்கலாம்.
இந்நிலையில் ஓர் ‘இயர் புக்’ எப்படி இருக்க வேண்டும்? ‘இந்து தமிழ் திசை’ வெளி யிட்டுள்ள 800 பக்க ‘இயர் புக்’ அதற்கு எடுத்துக்காட்டு. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன? முதலில் வடிவமைப்பு வாசகர்களைக் கவ்விப் பிடிக்கும். அடுத்து உள்ளடக்கத்தைத் தாங்கி நிற்கும் தலைப்புகள் ஈர்க்கின்றன. இந்தியத் தாய்த் திருநாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டிருக்கிறது ‘இயர் புக்’. இந்த ‘இயர் புக்’ எதையும் விட்டுவைக்கவில்லை. எதுவும் வெறும் செய்தித் தொகுப்பாக இல்லை. உயிரோட்டம் மிக்க கட்டுரைகளாகச் செறிவூட்டப்பட்டுள்ளது.
‘இந்து தமிழ் திசை இயர் புக்’, மற்ற இயர் புக்குகளிலிருந்து வேறுபடும் புள்ளி எது? அதற்கு ஒரு முப்பரிமாணம் இருக்கிறது. முதல் பரிமாணம், வாசிக்க வாசிக்க ஆர்வத்தைக் கூட்டித் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் எழுத்துநடை. அந்த எழுத்தை முன்வைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஆளுமைகள். இரண்டாவது பரிமாணம், செய்திக் களஞ்சியம். மூன்றாவது அதன் வடிவமைப்பு. இவையெல்லாம் சேர்ந்து போட்டித் தேர்வுகளுக்கான தரமான பார்வை நூலாக இது மலர்ந்துள்ளது.
போட்டித் தேர்வர்களுக்கான ஒரு பொக்கிஷமாக ‘இந்து இயர் புக்’ வெளியாவது மட்டும் அதன் வெற்றி அல்ல. செய்திகளை வாசகப் பரப்பில் கொண்டு சேர்க்கும் செய்நேர்த்தியில் பெற்றுள்ள வெற்றியே இப்புத்தகத்தின் பெருவெற்றி. வாசிக்கவும் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் சிந்திக்கவும் வாசகர்களிடம் கிடைத்துள்ள பூங்கொத்து ‘இந்து தமிழ் திசை இயர் புக்’.
- பேராசிரியர், தலைவர், பொருளியல் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி
மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402