ஆங்கிலம் அறிவோமே 4.0: 68 - ‘Super’ தெரியும், அதென்ன ‘Duper?’

ஆங்கிலம் அறிவோமே 4.0: 68 - ‘Super’ தெரியும், அதென்ன ‘Duper?’
Updated on
2 min read

ஒரு தூதரை ‘expel' செய்வதும், ஒரு தூதரை ‘recall’ செய்வதும் எதிரெதிர் செயல்களா? - அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல. ஒரு நாட்டுடன் நமக்குப் பெருத்த அளவில் கருத்து வேறுபாடு உண்டாகிறது என்றால், நம் நாட்டில் இருக்கும் அந்த நாட்டுத் தூதரை ‘expel’ செய்வோம். அதாவது, அவரை வெளியேற்றுவோம்.

அதே போல அந்த வெளிநாட்டிலிருக்கும் நமது தூதரை அங்கிருந்து விலக்கி, நம் நாட்டுக்கு வரவழைத்துக் கொள் வோம். அதாவது ‘recall’ செய்வோம். இரண்டையும் செய்யும்போது கடுமையான கருத்து வேறுபாடு அல்லது பகைமையை வெளிக்காட்ட வாய்ப்புள்ளது.

‘அவன் flat ஆயிட்டான்’ என்றால் அதற்கு என்ன அர்த்தம்? - ‘Flat’ என்பதைப் பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தும்போது அதற்கு 'அடுக்கு வீடு' என்று அர்த்தம். (‘Flat’ என்பதும் ‘apartment’ என்பதும் ஒன்றே என்பது கூடுதல் தகவல்). ஆனால், ‘flat’ என்பதை ‘adjective’ ஆகப் பயன்படுத்தும்போது அதற்குப் பல பொருள்கள்.

‘Flat wall paint’ என்றால் பளபளப்பில்லாத, அதாவது ஒளியைப் பிரதிபலிக்காத சுவர் பெயிண்ட் என்று பொருள். ஏற்ற இறக்கம் இல்லாமல், ஒருவர் இயந்திரத்தனமாகப் பேசும்போது அவர் பேச்சு ‘flat’ஆக இருக்கிறது எனலாம்.

பொதுவாக ‘flat’ என்றால், ‘மேடு பள்ளம் இல்லாத, சமதளம் கொண்ட’ என்று பொருள். ‘Flat desk’, ‘flat roof.’ ‘Flat computer’ (அல்லது ‘TV’, ‘monitor’) எனும்போது அதன் திரை தட்டையாக இருக்கிறது என்பதோடு அதன் நீள, அகலத்தோடு ஒப்பிடுகையில் ஆழம் என்பது மிகக் குறைவாக இருக்கிறது என்றும் பொருள்.

‘Flat market’ என்றால், பொருள்களின் விலை ஏறவோ இறங்கவோ செய்யாமல் அதே அளவில் இருப்பது. அவன் ‘flat ஆயிட்டான்’ என்பது அவன் சக்தியை இழந்தவனாகிவிட்டான் என்பதைக் குறிக்கிறது. ‘Tasks’ நிறைய செய்தாலும் ‘flat’ ஆகலாம். மதுபானத்தை நிறைய உட்கொண்டாலும் ‘flat’ ஆகலாம்.

‘My house is topsy turvy’ என்று ஒருவர் கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? - அவர் வீட்டில் பொருள்கள் இறைந்து கிடைக்கின்றன. ஒழுங்கற்றுக் காணப்படுகின்றன என்று அர்த்தம். ‘Topsy’ என்றால் ஒழுங்கற்று அல்லது குழப்பமான என்று பொருள். இது போன்று எதுகை மோனையுடன் இடம்பெறும் இரண்டு வார்த்தைகள் ஆங்கிலத்தில் சகஜம். ஓர் இசை ஆல்பம் ‘super duper hit’ என்னும்போது முதல் வார்த்தைக்கு நமக்குப் பொருள் தெரிகிறது.

இரண்டாவது வார்த்தைக்குத் தனக்கென்று ஒரு பொருள் இல்லாவிட்டாலும் முதல் வார்த்தையின் பொருளை மேலும் அழுத்தமாக அது வெளிப்படுத்துகிறது என்று கொள்ளலாம். ‘She is lovely dovey’ என்றால் அவள் மிக அதிக அளவில் அன்பை வெளிப் படுத்துபவள் என்று பொருள். ‘Bee’s knees’ என்றால் மிகுந்த உயர் தரம் கொண்ட என்று பொருள். ‘Have you tried this sweet? It's the bee's knees.’ ‘Razzle dazzle’ என்றால் மிகவும் சத்தம் எழுப்பி அதன்மூலம் பிறர் கவனத்தைக் கவர்வது என்று பொருள். ‘Amidst all the razzle-dazzle, the main issue could not be discussed in depth.’

சிப்ஸ்:

‘Ampersand’ என்றால்? - ‘&’ என்கிற குறியீட்டை உணர்த்தும் வார்த்தை.

நீ, நீங்கள் இரண்டுக்கும் ‘you’ என்கிற ஒரே சொல் என்றால், அது சில நேரம் அவமரியாதையாக ஆகிவிடுகிறதே? - நீங்கள் என்பதை உணர்த்த ‘please’ என்று சேர்த்துக் கொள்ளலாம். ‘You come’ - ‘You please come.’

‘Gingerly’ என்றால் காரசாரமாக என்று பொருள் கொள்ளலாமா? - இல்லை. தீங்கு விளை விக்காத, மென்மையான என்று பொருள்.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in