ஆங்கிலம் அறிவோமே 4.0 - 65 - ‘Same pinch’ ஐ எப்போது பயன்படுத்தலாம்?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 65 - ‘Same pinch’ ஐ எப்போது பயன்படுத்தலாம்?
Updated on
3 min read

‘Traffic’ என்றால் புரிகிறது. ‘Trafficking’ என்றால் என்ன பொருள்? - சட்டத்துக்குப் புறம்பான வழியில் எதையோ வாங்குவது அல்லது விற்பது. ‘Trafficking in stolen goods.’ சில சமயம் மனிதர்களை வாங்குவது விற்பது போன்றவற்றைக் குறிப்பதற்கும் இந்தச் சொல் பயன்படுகிறது. ‘Trafficking in young girls for prostitution.’

‘Bharat Jodo Yatra’ என்பதில் ‘jodo’ என்பது ஆங்கிலச் சொல்லா? - அல்ல. அதன் பொருள் இந்தி மொழியில் ‘ஒன்றிணைப்பது’ என்பதைக் குறிக்கிறது. (இந்தியாவை ஒன்றிணைக்கும் நடைபயணம் என்பதாக அந்தப் பெயர்).

ஆனால், ‘jodo’ என்று வேறு முறையில் பொருள் தரும் ஆங்கிலச் சொல் ஒன்று உண்டு. அது, மாசடையாத சுத்தமான நிலத்தைக் குறிக்கும். ஜப்பானிலுள்ள ஒரு புத்த மதப் பிரிவுக்கும் ‘Jodo’ என்று பெயர் உண்டு.

புதிய துணி உடுத்தினால் ‘New pinch’ என்று வாழ்த்துவது ஏன்? - வாழ்த்துவதுடன் இருக்க மாட்டார்கள். புதிய துணி உடுத்திய உங்களைக் கிள்ளவும் செய்வார்கள். ‘Pinch’ என்பதன் பொருள் கிள்ளுதல். நீங்கள் புதிய உடை அணிந்திருப்பதைப் பார்த்தவுடன் ஒருவர் விழிகள் அகல ‘New Pinch’ என்றபடி உங்களைக் கிள்ளினால், வலி உணர்வை மறைத்துக்கொண்டு புன்னகை பொங்க ‘Thank you’ என்று கூறுவதுதான் பண்பாடு.

மாறாக, உங்களைப் போன்றே உடை அணிந்து வந்துள்ள ஒருவர், உங்களைப் பார்த்து ‘Same pinch’ எனலாம். உங்கள் தனித்துவம் குறைந்துவிட்டதாக நீங்கள் கருதினால்கூட அப்போதும் புன்னகைப்பதே நாகரிகம். ‘Why blood, same blood’.

இப்போதெல்லாம் ஒருவரது சிந்தனை மற்றொருவருடையதோடு ஒத்துப்போனாலும்கூட ‘same pinch’ எனக் கூறிக்கொள்கிறார்கள். ‘To feel the pinch’ என்றால் கிள்ளுவதால் உண்டாகும் வலியை உணர் வது என்பதல்ல. அது செலவுகளைச் சமாளிக்க முடியாததால் ஏற்படும் வலி உணர்வு.

‘Myopic vision’ என்று ஒரு அரசியல்வாதி எதிரணியைச் சேர்ந்த ஒருவரை விமர்சித்திருக் கிறார். இதற்கு என்ன பொருள்? - ‘Myopia’ என்பது ஒரு கண் குறைபாடு. இது கிட்டப் பார்வை யைக் குறிக்கிறது. அதாவது, தொலைவில் உள்ளவை சரியாக தெரியாது. ‘Myopic vision’ என்றால் தொலைநோக்கு பார்வை அற்ற நிலையைக் குறிக்கிறது.

‘Voracious reader’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் ‘voracious eater’ என்று படித்தேன். ‘Voracious’ என்ற வார்த்தையின் பொருள் என்ன? - ‘Voracious eater' என்றால் மிக அதிகமாக உண்ணுபவர், மிக அதிகமாக உண்ண விரும்புபவர். ‘He has a voracious appetite’ என்றால் அவர் அதிகமாக சாப்பிடுபவர் என்று பொருள். ‘Voracious reader’ என்றால் அதிகமாகவும் ஆர்வ மாகவும் வாசிப்பவர்.

‘He is wet blanket’ என்பது சரியா? - ‘Wet blanket’ என்பது நனைந்த போர்வையைக் குறிக்கும். அப்படி இருக்கும்போது ‘It is a wet blanket' என்றுதானே இருக்க வேண்டும்? - இதைத்தான் கேட்கிறீர்கள் இல்லையா? இங்கே ‘wet blanket’ என்பது உவமானமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

பலரும் ஜாலியாகச் சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒருவர் சோகமயமாகக் காட்சி அளித்தால், அந்தச் சூழலின் உற்சாகமே கெட்டுவிடும் இல்லையா? அந்தச் சோக நபர்தான் ‘wet blanket.’

அப்படிப்பட்டவர் ஏதோ தனிப்பட்ட காரணத்தால் சோகமாகவும் களை இல்லாமலும் இருக்கலாம் அல்லது பிறர் உற்சாகத்தைக் கெடுப்பதற்காகவே அப்படித் தோற்றம் அளிக்கலாம். ஆனால், ‘killjoy’ என்று விமர்சிக்கப்படுபவர் மற்றவர் மகிழ்ச்சியைக் கெடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தில் செயல்படுபவர். ‘Sadist’ என்பவரும் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர்தான்.

சிப்ஸ்:

‘Surveillance' என்றால்? - தீவிர கண்காணிப்பு. சிஐடிக்களும் சிசிடிவி கேமராக்களும் செய்வது.

Waggish’ என்றால்? - வேடிக்கையான, குறும்புத்தனமான.

Vying’, ‘Envying?’ - போட்டியிடுவது, பொறாமைப் படுவது.

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in