

பொருள் நான் தேடிப் பார்த்த நூல்களில் கிடைக்கவில்லை. விளக்கம் கிடைக்குமா? - வாசகரே, இது கொசுக்களை அழிக்க வேண்டிய தருணம் என்று அவர் குறிப் பிட்டிருக்கிறார். தன்னை மொய்க்கும் ஊடகவியலாளர்கள், ரசிகர்களை அப்படிக் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். Drain the swamps என்பதன் தொடர்ச்சியாக mosquito ridding (moment) என்பது இருக்க வாய்ப்பு உண்டு. Drain the swamps என்றால் சேற்றைச் சரிசெய்வது. அதாவது அந்தப் பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவது. ஊழலை வேரறுப்பது என்கிற பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது.
இதே பொருளில் (நோய்களை உண்டாக்கக்கூடிய கொசுக்களை அழிக்க வேண்டும் என்கிற பொருள் கொண்ட) ஊழலை அழிக்க வேண்டும் என்பதை mosquito ridding moment என்று அவர் கூறியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
***
‘தமிழ்நாடு' என்பதை ஆங்கிலத்தில் ‘THAMIZHNADU' என்றுதானே எழுத வேண்டும்! ஏன் ‘த, ழ' க்கு உரிய முக்கியத்துவம் தராமல் எழுதுகிறார்கள்? - அதானே, நியாயம்தான்! Zh என்பதை ‘ழ்’ என்று வைத்துக்கொள்வதில் தவறில்லை. நல்லவேளையாக எனக்குத் தெரிந்து எந்த ஆங்கிலச் சொல்லிலும் zh என்பது இடம்பெறவில்லை. (முதன்முறையாக உங்கள் பரிந்துரையை வாசிக்கும் அந்நியர்கள் ‘தாமிழ்நடு’ என்று இதைப் படிக்காமல் இருப்பார்களாக!) Batsman என்பதைத் தமிழில் எப்படி எழுத? பாட்ஸ்மென், பேட்ஸ் மென், பாட்ஸ்மன், பேட்ஸ்மன் எதுவுமே முழுமை யாக batsman என்பதற்கானதாகத் தெரியவில்லை! Transliterate செய்வதில் மொழிகளுக்கிடையே எப்போதுமே சில சிக்கல்கள் எழுகின்றன.
***
She is no longer with us என்பதன் உண்மைப் பொருள் என்ன? - நண்பரே, இப்படி யாராவது குறிப்பிட்டால் ‘அவள் ஊரை விட்டுப் போய் விட்டாளா அல்லது உலகத்தை விட்டே போய் விட்டாளா’ என்பதை முதலில் கேட்டு (இங்கிதமாகத்தான்) உறுதி செய்துகொள்ளுங்கள். அல்லது அடுத்த வாக்கியத்தை எதிராளி கூறும் வரை காத்திருங்கள்.
‘She is no longer with us. She left for Germany’.
‘She is no longer with us. Poor soul’.
***
‘41 trapped workers who remained inside the Silkyara tunnel’ என்கிறது ஒரு செய்தி வாக்கியம். இந்த இடத்தில் remain என்பது எதைக் குறிக்கிறது? - Only about half of the original employees remains. Of the allotted time, only ten minutes remain. இது போன்ற வாக்கியங்களில் மீதமிருப்பது என்கிற பொருளில்தான் remain என்கிற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆக பத்தில் ஏழைக் கழித்தால் remaining மூன்று என்பதுபோல் யோசித்து, அனைவருமே உள்ளே சிக்கிக் கொண்ட பிறகு remained என்கிற சொல் எதற்கு என்று கேட்கிறீர்களோ? remain என்கிற சொல், ‘ஒரே நிலையில் இருப்பது’ என்றும் பொருள் தரும். Please remain seated என்றால் உட்காந்திருப்பவர்களைப் பார்த்து தொடர்ந்து உட்கார்ந்திருங்கள் என்று கூறுவதாக அர்த்தம். செய்தி வாக்கியத்தில் அந்த 41 தொழிலாளர்களும் தாங்களாக விருப்பப்பட்டுத் தங்கவில்லை. சுரங்கத்தில் சிக்கிக்கொண்டார்கள் என்கிறபோதிலும் அவர்கள் அங்கே தங்கி (சிக்கி) விட்டனர் என்கிற பொருளில் remained என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- aruncharanya@gmail.com