

டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு என நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியாக உள்ள 450 உதவியாளர் பணியிடங்கள் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னையிலுள்ள அலுவலகத்தில் மட்டும் 13 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணையவழி தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
# தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்ணோடு ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
# வயது வரம்பு: 2023 செப்டம்பர் 1ஆம் தேதி அன்று விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. இதுகுறித்த விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
# விண்ணப்பிக்கும் முறை: ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://shorturl.at/awLRW) இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
# விண்ணப்பிக்க கடைசி நாள்: 04-10-2023