ஆங்கிலம் அறிவோமே 4.0 - 50 - ‘Blockbuster’ உருவான கதை தெரியுமா?

ஆங்கிலம் அறிவோமே 4.0 - 50 - ‘Blockbuster’ உருவான கதை தெரியுமா?
Updated on
2 min read

‘Fanning effect’ - இந்த வார்த்தை களை ஒரு செய்தித்தாளில் படித் தேன். இதற்கு என்ன பொருள்?

அணைந்து கொண்டிருக்கும் நெருப்பை ஊதினால் அல்லது விசிறி விட்டால் அது தொடர்ந்து எரியும் அல்லவா? அது போன்ற செயல். ஒரு உணர்வையோ செயலையோ வலிமையாக்கும் விஷயம்.

குற்றம் நடந்த இடத்திலிருந்த ஒருவரிடம் சில கேள்விகளைக் கேட்கும் போது அவர் பதில் கூறவில்லை என்றால் மர்மமாக இருக்கும் அல்லவா? அது பல கேள்விகளை எழுப்புமல்லவா? ‘He did not answer their question. This fanned their curiosity.’

***

ஆங்கில நாளிதழ் ஒன்றில் ‘Trump campaign reports raising over 7 million dollars after mug shot’ என்ற தலைப்பில் பார்த்தேன். இதில் ‘mug shot' என்ற வார்த்தைக்கு என்னிடம் உள்ள பல அகராதிகளில் தேடியும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கான விளக்கத்தை விளக்க வேண்டுகிறேன்.

தனது ‘Mug shot’ஐ ட்ரம்ப் எப்படி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் என்பது இந்தப் பகுதிக்குத் தேவையில்லை. எனவே ‘Mug shot’ என்பதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

சிறையில் அடைப்பதற்கு முன் கைதி களைப் புகைப்படம் எடுப்பார்கள். நிற்க வைத்து நேரடியாக முகம் தெரியும்படியாகவும் பக்கவாட்டிலும் எடுப்பார்கள். இவற்றை ‘mug shots’ என்பார்கள். இது போன்ற பலரின் (குற்றவாளிகளின்) புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை ‘mug book’ என்பதுண்டு.

இந்த ஒளிப்படங்கள் தற்போதும் வருங் காலத்திலும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும். வருங்காலத்தில் வேறு குற்றங்கள் நடக்கும்போது அவற்றைச் செய்தது இவர்தானா என்பதை விசாரிப்பவர்கள், கண்டுபிடிக்கவும் இவை உதவும். பதினெட்டாம் நூற்றாண்டில், பேச்சு வார்த்தையில், ‘mug’ என்ற சொல் ’முகம்’ என்பதைக் குறித்தது. ஒருவரின் முகத்தைக் காட்டும் சிறிய ஒளிப்படத்தை ’mug shot’ என்றனர்.

***

பிரமாதமாக வசூலைக் குவிக்கும் படங்களை ‘பிளாக்பஸ்டர்ஸ்’ என்கி றார்களே, இதன் பொருள் என்ன?

கருமை நிறத்தோடு இது தொடர்புபடுத்தப்படுவது ஏன்? கருப்பு நிறத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அது ‘blockbusters’.

‘Block’ என்பது ‘தொகுப்பு’ என்பதைக் குறிக்கும் ஒருசொல். ‘Block of buildings’ என்றால் கட்டிடங்கள் அமைந்த ஒரு தொகுப்பு. ‘Buster’ என்றால் வெடிக்கச் செய்வது அல்லது அழிப்பது. 1940களில் வான்வழியாக வெடிகுண்டுகளைச் செலுத்தி எதிரி நாடுகளில் உள்ள பல கட்டிடங்களை அழித்தனர்.

அத்தகைய வெடிகுண்டுகளை ‘blockbusters’ என்பார்கள். 1943இல் ‘Bombardier’ என்று ஒரு திரைப்படம் வெளியானது. ‘Bombardiers’ என்பது எதிரி நாடுகளில் வெடிகுண்டுகளை வீசும் ராணுவ வீரர்களைக் குறிக்கும் சொல். இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியைத்தான் அந்தத் திரைப்படம் விவரித்தது (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்துக்காக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது).

இந்தத் திரைப்படத்துக்கான ஒரு விமர்சனத்தில் ‘The block-buster of all action-thrill-service shows!’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து அந்த படத்துக்கான ஒரு விளம்பரத்தில் ‘இது ஒரு இரண்டு டன் ப்ளாக்பஸ்டரைப் போல உங்கள் இதயத்தைத் தாக்கும்' என்று கூற (சிங்கம் சூர்யாவைவிட அரை டன் அதிக அளவு!), அதற்குப் பிறகு அந்தச் சொல் பெருமளவில் அதிர்ச்சிகளை அளித்து வசீகரிக்கும் திரைப்படங்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இப்போது வசூலை வாரிக்குவிக்கும் திரைப்படங்களை அப்படிச் சொல்கிறார்கள்.

சிப்ஸ்:

# ‘Heritage, hermitage?’

பாரம்பரியம். ஆசிரமம்.

# தங்கத்தின் சுத்தத்தை ‘கேரட்’ என்ற ஒரு காய்கறியின் பெயரில் குறிப்பிடுவதேன்?

தங்க அளவு ‘karat.’ காய்கறி ‘carrot.’

# ‘Buffet’ என்பதற்கு எதிர்ச்சொல் எது?

‘A la carte’ - இது விருப்பப்பட்ட உணவுவகையை நமது மேசைக்கே வரவழைத்துச் சாப்பிடுவது (‘ரெண்டு இட்லி, ஒரு வடை, கெட்டிச் சட்னி' என்பது உள்பட). (பஃபே என்று உச்சரித்தாலும் இறுதியில் ஒரு தேநீர்(டீ) தேவை. ‘Buffet’).

- aruncharanya@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in