சேதி தெரியுமா? - இகா ஷ்வாடெக் முதல் பிரபஞ்சன் வரை

போலந்து வீராங்கனை இகா ஷ்வாடெக்
போலந்து வீராங்கனை இகா ஷ்வாடெக்
Updated on
1 min read

ஜூன் 10, 11: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா முக்-ஷோவாவை போலந்து வீராங்கனை இகா ஷ்வாடெக் வீழ்த்திப் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நார்வேயின் கஸ்பர் ரூட்டை செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வீழ்த்திப் பட்டம் வென்றார்.

ஜூன் 11: லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றது.

ஜூன் 11: ஜப்பானில் நடைபெற்ற ஹாக்கி மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் தென் கொரியா அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.

ஜூன் 13: தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தகவல் ஆணையராக ஓய்வுப்பெற்ற டிஜிபி முகமது ஷகில் அக்தர் நியமிக்கப்பட்டார்.

ஜூன் 13, 14: பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் அவருடைய அலுவலக அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார்.

ஜூன் 14: நீட் தேர்வில் தேசிய அளவில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த பிரபஞ்சன் என்கிற மாணவர் முதலிடம் பிடித்தார்.

ஜூன் 15: முன் அனுமதியின்றி விசாரணை நடத்த சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றது.

ஜூன் 15: அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்டிரம், கட்ச் இடையே கரையைக் கடந்தது.

ஜூன் 17: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் வசம் இருந்த மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்குத் துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் வழங்கப்பட்டது. இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in