

‘Everything but the kitchen sink' என்று ஒரு ‘idiom’ உண்டு. ‘நினைவுக்கு வரக்கூடிய எல்லா பொருள்களையும்' என்பது இதன் பொருள். இரண்டாம் உலகப் போரின்போது இந்த ‘idiom’ உருவானது என்கிறார்கள். ‘Everything but the kitchen sink was thrown on the enemies.’
வெளியூர் செல்லும்போது தேவையான பொருள்களை மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும் என்பது உங்கள் கொள்கை. ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் உங்கள் நண்பர் தான் கொண்டுசெல்ல வேண்டிய சூட்கேசில் வேண்டாத பொருள்கள் பலவற்றையும் அடைத்துக்கொள்கிறார். இதைப் பார்த்து நீங்கள் எரிச்சலாக ‘Everything but the kitchen sink in your suitcase' என்று முணுமுணுத்தால் வியப்பில்லை.
கீழே உள்ள நான்கு வாக்கியங்களில் எது சரியானது?
(1) There was a match between CSK and KKR
(2) There was a match between CSK against KKR
(3) There was a match among CSK and KKR
(4) There was a match among CSK against KKR
இரண்டு பொருள்கள் மற்றும் நபர்கள் ஒப்பிடப்படும்போது இடம்பெறும் வார்த்தை ‘between’. இரண்டுக்கு மேல் ஒப்பிடப்படும்போது ‘among’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படும். எனவே 3, 4 வாக்கியங்கள் தவறானவை என்றாகிவிடுகிறது.
‘Between’ என்று சொல் பயன்படுத்தப்படும்போது ‘and’ என்ற வார்த்தை இடம்பெறுவது இயல்பு. ‘Please come between 4 p.m. and 5 p.m.’ (Between 4 p.m. to 5 p.m. என்று எழுதுவதும் தவறானது). எனவே முதல் வாக்கியமே சரியானது.
| சிப்ஸ் l ‘words fail me’ என்றால்? |
‘என் மனைவியின் மருத்துவ ஆவணத்தில் ‘extubated’ என்ற சொல் காணப்படுகிறது. அதன் பொருள் என்ன?' என்று கேட்கிறார் ஒரு வாசகர்.
‘டியூப் நீக்கப்பட்டது' என்று பொருள்.
சில சமயம் சில வகை நோய்கள் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். அப்போது மருத்துவர் உங்கள் தொண்டையில் காற்றுக் குழாய்க்குள் ஒரு டியூபை செருகுவார். அந்த டியூப் ஆக்சிஜன் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் சுவாசம் விடுவது எளிதாக்கப்படுகிறது.
‘Donkey's years’ என்பது நெடுங்காலம் என்பதைக் குறிக்கிறது. ‘He has been in the same job for donkey's years’. ‘I haven't seen her in donkey's years’.
தொடக்க காலத்தில் கழுதையின் நீண்ட காதுகள் என்ற பொருளில் ‘donkey's ears’ என்ற பொருளில் கூறப்பட்டு பிறகு மாறி இருக்க வாய்ப்பு உண்டு.
(தொடரும்)