

தமிழகத்தில் மின்வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப சார்ஜிங் வசதிகளும் மின்வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசே, மின் பேருந்துகளை இயக்கி,முன்னுதாரணத்தை உருவாக்கி வருகிறது. மின் வாகனங்களுக்கான சார்ஜிங் வசதியை பொறுத்தவரை, தனி வீடுகள் என்றால் எளிதாக உருவாக்க முடியும். அடுக்குமாடி குடியிருப்புகளில் தனித்தனியாக ஒவ்வொரு வீட்டுக்கும் வசதி ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.