நவீன தொழில்நுட்பத்தின் அவசியம்: எஃகு-கான்கிரீட் இணையும் கலப்புக் கட்டுமான முறை

நவீன தொழில்நுட்பத்தின் அவசியம்: எஃகு-கான்கிரீட் இணையும் கலப்புக் கட்டுமான முறை
Updated on
3 min read

இந்திய பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலையில், நாடு முழுவதும் பல்லடுக்கு கட்டிடங்களுக்கான (Commercial Buildings) தேவையானது பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கட்டிடங்களை விரைவாகக் கட்டி முடிப்பது பெரும் சவாலாக உள்ளது.

இந்த சிக்கலுக்கு தீர்வாக, கட்டுமானப் பணிகளை தளத்தில் குறைத்து, தொழிற்சாலைகளிலேயே கட்டிடத்தின் பாகங்களை முன்கூட்டியே தயாரிக்கும் முன்தயாரிப்புக் கட்டிடங்கள் (PEB- Pre-Engineered Buildings) மற்றும் எஃகு-கான்கிரீட் கலப்புக் கட்டுமான முறை தற்போது வேகமெடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குகிறார் சென்னை ஐஐடி கட்டிடவியல் பொறியியல் துறை (கட்டமைப்புப் பொறியியல் ஆய்வகம்) பேராசிரியர் எஸ்.ஆர்.சதிஷ் குமார் .

கடந்த 30 ஆண்டுகளாகத் தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் கட்டுவதற்கு மட்டுமே இந்த முன்தயாரிப்பு கட்டுமான முறை (PEB) பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது வணிகக் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வந்துவிட்டது. அதிவேகக் கட்டுமானம், குறைந்த மனித உழைப்பு, சிறப்பான தரக்கட்டுப்

பாடு மற்றும் அழகிய தோற்றம் ஆகியவற்றுடன் சிறந்த காற்றோட்டம், வெப்பக் காப்பு (Thermal insulation) மற்றும் மழைநீர் சேகரிப்பு என பல நன்மைகளை இது வழங்குகிறது.

பல்லடுக்குக் கட்டிடங்களில் இந்த முறையைப் பயன்படுத்தும்போது, தளங்கள் (Floors) மற்றும் சுவர்களுக்குக் கான்கிரீட்டைப் பயன்படுத்துவது சவாலாக இருந்தது. ஆனால், தற்போது எஃகு-கான்கிரீட் கலப்புக் கட்டுமான முறை' மற்றும் எடை குறைந்த ஏரோகான் (AAC) செங்கற்கள், சுவர்ப் பேனல்கள் மூலமாக இந்தச் சவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதன் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவாகும்.

உருவாக்கம்

கட்டிடத்தின் பிரதான எஃகுத் தூண்கள் மற்றும் சட்டங்கள், தொழிற்சாலையிலேயே தடிமனான இரும்புத் தகடுகளை கொண்டு ‘ரோபோடிக் வெல்டிங்’ (Robotic welding) மூலம் உருவாக்கப்படுகின்றன. எஃகின் (Steel) பயன்பாட்டைக் குறைக்கவும், திறனை அதிகரிக்கவும் இந்தத் தூண்கள் கூம்பு (Tapered) வடிவத்தில் வார்க்கப்படுகின்றன.

இவற்றை இணைப்பதற்கான துளைகள் மற்றும் பிணைப்புகளும் தொழிற்சாலையிலேயே முடிந்துவிடுகின்றன. இந்த எஃகுச் சட்டங்கள் துருப்பிடிக்காமல் இருக்க, அரிப்புத் தடுப்புப் பூச்சு (Galvanizing) மற்றும் பல அடுக்கு சிறப்பு பெயின்ட் பூசப்படுகிறது. இதனால் அடுத்த 20-30 ஆண்டுகளுக்குப் பராமரிப்புச் செலவு இருக்காது.

துணை பீம்கள், மேற்கூரைச் சட்டங்களுக்கு (Purlins and Girts) 3 மி.மீ-க்கும் குறைவான தடிமன் கொண்ட 'குளிர்-வடிவமைக்கப்பட்ட' (Cold-formed) மெல்லிய எஃகுத் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கும் தரமான பெயின்ட் அடிக்கப்பட்டு நட்டுகளால் முடுக்கப்படுகின்றன.

இதுதவிர சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் வெப்பம் இறங்காமல் இருக்க, பாலியுரேத்தீன் (PU) மற்றும் ராக்வூல் (Rockwool) கொண்ட பிரத்யேக தகடுகள் 'சுய-துளையிடும் திருகுகள்' (Self-tapping screws) மூலம் பொருத்தப் படுகின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in