மண்ணே சுவராகும்… செலவும் குறையும்! - செங்கல்லுக்கு மாற்றாகும் மண் கட்டுமானம்

மண்ணே சுவராகும்… செலவும் குறையும்! - செங்கல்லுக்கு மாற்றாகும் மண் கட்டுமானம்
Updated on: 
1 min read

“வீடு கட்ட மண்ணைத் தோண்டுகிறோம்; அதே மண்ணைக் கொண்டு வீட்டின் சுவரையும் எழுப்ப முடிந்தால் எப்படி இருக்கும்?” வீடு கட்டத் தொடங்கியதும் செங்கல் லாரி வருகிறது; பின்னால் மணல், சிமென்ட் எனச் செலவுகளும் வரிசைகட்டி வருகின்றன.

பொருளின் விலையோடு அதைத் தொலைவிலிருந்து கொண்டுவரும் செலவும் சேரும்போது, நடுத்தரக் குடும்பத்தின் வீட்டுக் கனவு பட்ஜெட்டைத் தாண்டிவிடுகிறது.

இந்தச் சூழலில் பழைய மண் வீட்டுக்கு நவீனப் பொறியியல் கொடுத்த புதிய வடிவம்தான் CSEB — Compressed Stabilised Earth Block. பெயர் பெரிதாக இருந்தாலும் தொழில்நுட்பத்தின் அடிப்படை எளிமையானது.

பொருத்தமான மண்ணுடன் தேவையான அளவு மணல் மற்றும் சிமென்ட் அல்லது சுண்ணாம்பு போன்ற ஸ்டெபிலைசர் சேர்த்து, குறைந்த அளவு தண்ணீருடன் இயந்திரத்தில் அதிக அழுத்தம் கொடுத்து கட்டுமானக் கற்கள் தயாரிக்கப்படுகின்றன.

Loading content, please wait...

X