செட்பேக் விடணும்... டீவியேஷன் கூடாது... கட்டிட அனுமதி குறித்து தெரிஞ்சுக்குங்க...

இந்திய கட்டுநர் சங்க, தமிழக கிளையின் சிஎம்டிஏ - டிடிசிபி - கமிட்டி தலைவர், பொறியாளர் எஸ்.ராமபிரபு
செட்பேக் விடணும்... டீவியேஷன் கூடாது... கட்டிட அனுமதி குறித்து தெரிஞ்சுக்குங்க...
Updated on
3 min read

முன்னமாதிரி கிடையாது! நம்மள நாலு கண்ணு கண்காணிக்கும். பக்கத்துவீட்டில் நல்லா பேசிக்கிட்டிருக்கவங்க கூட, பெட்டிஷன் போட்டு வேலையை நிறுத்திடுவாங்க... நாம சின்னச்சின்னதா சேர்த்த காச வைச்சு வீடு கட்டும் போது, ஆசைப்பட்டு சின்னதா சறுக்கினா சிக்கல் தான்.

தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு எது கட்டினாலும், விதிகள் படி அனுமதி பெறுவது என்பது அவசியம். அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கு விதிகள் நன்றாக தெரியும். தனி வீடு கட்டுபவர்கள் பெரிதாக விதிகளை தெரிந்து வைத்திருப்பதில்லை. ஆனால், விதிகள் தெரிந்து கட்டினால், பின்னாளில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

முன்பெல்லாம், புளூபிரிண்ட் தயாரித்து அதனுடன் ஆவணங்களை சேர்த்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள், சிஎம்டிஏவில் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும். அதன்பின், சம்பந்தப்பட்ட அமைப்பின் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அதன் பின் அனுமதி தருவார்கள். விதிகள்படி ஆவணங்களோ, வரைபடமோ இல்லாவிட்டால் அதில் உள்ள குறைகளை களைய காத்திருக்க வேண்டும். ஆனால், அந்த காலம் தற்போது மலையேறி விட்டது.

விதிகள்படி ஆவணம் தயாரிக்கப்பட்டு சமர்ப்பித்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதி கிடைக்காவிட்டால், அனுமதி கிடைத்ததாக கருதி பணியை தொடங்கும் நிலையும் தற்போது உள்ளது. அந்த அளவுக்கு ஆன்லைன் கட்டிட அனுமதி மற்றும் ஒற்றைச்சாளர அனுமதி முறையால் பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே அனுமதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதிலும், குறிப்பாக 2500 சதுரடி நிலத்தில் 3500 சதுரடிக்குள் வீடு கட்டுபவர்கள் சுயசான்று அடிப்படையில் அனுமதி பெறும் வசதி உள்ளதால், பொதுமக்கள் அரை மணிநேரத்தில் அனுமதி பெற்று வீடு கட்டும் பணியை தொடங்கி விட முடிகிறது. ஆனால், அவ்வாறு வீடு கட்டும் போதும், விதிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

யாருக்கு விண்ணப்பிப்பது?

கட்டிட அனுமதியை பொறுத்தவரை தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் சென்னை மாநகராட்சி உட்பட அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் வழங்குகின்றன. இவற்றுக்கு அதிகார எல்லை என்பது வகுக்கப்பட்டுள்ளது.

சிஎம்டிஏ தகவல் படி, தரைதளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட சிறப்பு கட்டிடங்கள், 4 தளங்களுக்கு மேற்பட்ட தொகுப்பு கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதியை சிஎம்டிஏ வழங்குகிறது. இவை தவிர மற்ற வளர்ச்சிக் கட்டிடங்கள், சாதாரண வகைக் கட்டிடங்கள் ஆகியவைகளுக்கான திட்ட அனுமதிக்கு சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிங்களிடம் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in