

கட்டுமானத்துறையில், இந்த ‘ப்ரீ காஸ்ட்’ தற்போது அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான தேவை அதிமுள்ள இடங்களில், கால சுருக்கத்தையும், செலவின சுருக்கத்தையும் அதே நேரம் ஸ்திரத்தன்மையையும் அடிப்படையாக கொண்டு இந்த கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தற்போதுள்ள சூழலில் அரசின் அடிப்படை கட்டமைப்புகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, பாலங்களின் தாங்கு தளங்கள், மெட்ரோ ரயில் தாங்கு தளங்கள், வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளிலும் இந்த முன் வார்ப்பு கட்டுமானம் (ப்ரீ காஸ்ட்) அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.