எத வாங்கப்போறீங்க! - தனிவீடா... அடுக்குமாடி குடியிருப்பா?

எத வாங்கப்போறீங்க! - தனிவீடா...  அடுக்குமாடி குடியிருப்பா?
Updated on
3 min read

வாழ்நாள் முழுக்க குடும்பத்துக்காக கஷ்டப்படும் நமக்கு, சொந்தமா ஒரு வீடு என்பது மிக நீண்ட கனவு. அந்த கனவு நனவாகினால் குடும்பத்தில் சந்தோஷமும், உற்சாகமும் கரைபுரளும். சொந்த வீடு என்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, வாழ்நாள் சம்பாத்தியத்தை பொறுத்து அமையும்.

அவர்கள் சேர்க்கும் தொகை, கடன் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டின் அளவும், அதில் உள்ள வசதிகளின் அளவும் வேறுபடும்.

அதே நேரத்தில், நாம் வசிக்கும் பகுதியின் தன்மை, நிலத்தின் விலை, விலைவாசி உயர்வு மற்றும் இட நெருக்கடி காரணமாக தனி வீடு ஒன்றை சொந்தமாக்குவதில் பல்வேறு சிரமங்கள் நிலவி வருகின்றன.

அதே நேரம் பெருநகரப் பகுதிகளில் மக்களின் இல்லத் தேவையை அடுக்குமாடி குடியிருப்புகள் சாத்தியமாக்கி வருகின்றன. கிராமப்புறங்களை ஒட்டிய நகர்ப் பகுதிகளில் தனிவீடுகள், அடுக்குமாடி வீடுகள் பரவலாக பட்ஜெட்டை பொறுத்து மக்களால் வாங்கப்படுகின்றன.

குறிப்பாக, சென்னையை எடுத்துக் கொண்டால், புறநகர்ப்பகுதிகளில் கூட தற்போது நிலத்தின் மதிப்பு கோடியை தாண்டிவிட்டது. அதே போல், அடுக்குமாடி குடியிருப்பும் அனைத்து வசதிகளுடன் வாங்க வேண்டுமானால் ஒரு கோடிக்கு மேல் தொகை தேவைப்படும்.

இந்த சூழலில், நாம் இடம், வசதிகள், பராமரிப்பு, சமூகம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து தனி வீடு மற்றும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இதில் ஏதேனும் நமக்கு பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம்.

அவ்வாறு வாங்கும் போது, தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு இடையிலான வித்தியாசங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இதைப்பற்றி விளக்குகிறார், தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சில் (என்ஏஆர்இடிசிஓ) - தமிழ்நாடு துணைத்தலைவர் பி.மணிசங்கர்.

மனிதனின் அடிப்படை வாழ்வியலுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் தேவை.

வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை காரணமாக இருப்பிட வசதி அதிகரிக்கிறது. தற்போதைய சூழலில், பொதுமக்கள் அவர்களின் கையிருப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு தனி வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்கின்றனர். ஒருமுறை முதலீடு என்ற அடிப்படையில் இரண்டு இருப்பிடங்களிலும் இருக்கும் சாதக, பாதகங்களை அறிந்து வாங்குவது அவசியமானது.

தனி வீடு

இதில் தனி வீடுகளை பொறுத்தவரை, இன்றளவும் அதிகளவில் மக்களால் விரும்பப்படுகிறது. நிலம், நாம் கட்டும் வீடு, வீட்டின் வெளிப்புறம், உட்புறம் என அனைத்தும் அந்த வீட்டின் உரிமையாளரின் முடிவை பொறுத்ததாக இருக்கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in