

இடம் வாங்கியாச்சு ... அடுத்தது வீடுதான். ஒவ்வொருவருக்கும் நமது கனவு வீடு எப்படி வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இடத்தை வாங்கியதும், வீடு கட்டி விட முடியாது. நிலத்தின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை அளவீடு செய்து. உரிமம் பெற்ற பொறியாளர் மூலம் கட்டிட வரைபடம் தயாரித்து, அதன்பின், வரைபட அனுமதி கிடைத்த பின்னர், கட்டிடத்தை கட்ட வேண்டும்.
இது பொதுவான நடைமுறை, ஆனால், அதற்கிடையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. வீடு கட்டும் போது அடிப்படையில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக பிரிவு தலைவர் ப..மணிசங்கர்.