

தனி வீடோ, அடுக்கு மாடி குடியிருப்போ எதுவாக இருந்தாலும் கட்டிட அனுமதி என்பது மிகவும் அவசியம். அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் அரசால் வழங்கப்படுவதில்லை.
அதே நேரம், கட்டிட அனுமதி வழங்குவதை ஆன்லைன் வழியில் மாற்றி எளிமையாக்கியுள்ளது தமிழக அரசு. ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும் நிலையில், வீட்டிலிருந்த படியே விண்ணப்பித்து அனுமதி பெற முடியும்.