செங்கலுக்கு மாற்றாகும் எடை குறைந்த ஏஏசி கற்கள்!

செங்கலுக்கு மாற்றாகும் எடை குறைந்த ஏஏசி கற்கள்!
Updated on
1 min read

பல்லாயிரம் கோடி புரளும் கட்டுமானத்துறையில், நவீன தொழில்நுட்பங்கள் நாள்தோறும் புகுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் செங்கலுக்கு மாற்றாக கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுவதுதான் ஆட்டோகிளேவ்டு ஏரேட்டட் கான்கிரீட் எனப்படும் ஏஏசி கற்கள். மணல், சிமென்ட், சுண்ணாம்பு மற்றும் அலுமினிய தூள் கொண்டு தயாரிக்கப்படும் இலகுரக கட்டுமானப் பொருள் ஏஏசி கற்களாகும்.

வழக்கமான செங்கற்களை விட எடை குறைவானதும், வெப்பத்தை தடுக்கும் தன்மையும் கொண்ட இக்கற்கள், மிகவும் உறுதியானவையாகும். தீயை தாங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

பல்வேறு காரணங்களால் செங்கற்கள் கிடைப்பதில் எழும் பற்றாக்குறையை போக்க வந்துள்ள இந்த ஏஏசி கற்கள், குறைந்த எடையுடன் இருப்பதால், கட்டிடத்தின் ஒட்டுமொத்த எடை குறைந்து, அடித்தளத்துக்கு செலுத்தப்படும் அழுத்தம் குறைகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in