

ஒரு சொத்தை வாங்கவும், விற்கவும் அதற்கான பட்டா,சிட்டா, புலப்படம் ஆகியவை மிகவும் அவசியம். பட்டாவை பொறுத்தவரை யார் பெயரில் இருந்து தற்போது யார் பெயரில் மாறியுள்ளது என்பதையும் அறிந்து கொண்டே சொத்துக்களை வாங்க வேண்டும். அப்போது தான் சொத்து பரிமாற்றம் சரியாக நடைபெறுவதாக கருத முடியும்.
இதற்காக, தற்போது வருவாய்த்துறை புதிய இரு வசதிகளை பொதுமக்களுக்கு இணையதளம் வழியாக வழங்கியுள்ளது. இந்த இரண்டு வசதிகளும் ஏற்கெனவே அறி விக்கப்பட்டவை என்றாலும், சமீபத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது ஒருங்கிணைந்த நில ஆவணம் நிலம் வாங்கவும், விற்கவும், வங்கிக்கடன் பெறவும், அ-பதிவேடு, சிட்டா, புலப்படம் ஆகியவை மிகவும் அவசியம்.
இவற்றை தமிழக அரசு ஏற்கெனவே ‘e-services.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தனித்தனியாக பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் தேவை கருதி இவை மூன்றையும் சேர்த்து ஒரே ஆவணமாக வழங்கும் வகையில், தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.