

நிலம் அல்லது வீடு வாங்கும் போது, வழிகாட்டி மதிப்பு (Guideline Value), சந்தை மதிப்பு தெரிஞ்சுக்கிறது அவசியம். வழிகாட்டி மதிப்பு என்பது அரசு நிர்ணயிக்கும் ஒரு சொத்தின் குறைந்தபட்ச அதிகாரப்பூர்வ மதிப்பாகும். சந்தை மதிப்பு என்பது ஒரு சொத்தின், அன்றைய உண்மையான விற்பனை விலையாகும்.
வழிகாட்டி மதிப்பை பதிவுத்துறை மற்றும் வருவாய் துறையால் நிர்ணயிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட நிலம் அல்லது கட்டிடத்தின் சதுர அடி அல்லது ஏக்கர் அடிப்படையிலான குறைந்தபட்ச மதிப்பீடாகும். சொத்து வாங்கும்போதும் விற்கும்போதும் ஆவணங்கள் பதிவுக்கு வழிகாட்டி மதிப்பே அடிப்படையாகும். பதிவு செய்யும் போது வாங்குபவர் வழிகாட்டி மதிப்புக்கு மேல் செலுத்த வேண்டும்.