

கட்டுமானத்துறையில் செலவு குறைக்கும் நவீன தளவாட பொருட்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. களிமண் செங்கற்களுக்கு பதில், பிளை ஆஷ் பிரிக்ஸ், இன்டர்லாக் பிரிக்ஸ், ஏஏசி கற்கள் என பல்வேறு புதிய கட்டுமான பொருட்கள் வந்துவிட்டன.
இவற்றுடன், தற்போது பிரபலமாக உள்ளது கேரளா மட் பிரிக்ஸ். 6 அல்லது 7 செங்கற்கள் வைக்க வேண்டிய இடத்தில் இந்த கேரளா மட் பிரிக்ஸ் (எம் பிரிக்ஸ்) ஒன்று வைத்தே கட்டிடம் கட்டலாம்.