

இன்றைய சூழலில், இட நெருக்கடியின் காரணமாக, மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் நகரப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன. இந்த குடியிருப்புகளை வாங்குவோருக்கு குறிப்பிட்ட சதுரடி இடம் பதிவு செய்து தரப்பட்டாலும், அந்த இடம் எங்கிருக்கிறது என்பதை யாராலும் கூற முடியாது.
இவ்வாறிருக்கும் போது, வாகன நிறுத்துமிடம், குப்பை கொட்டுதல், செல்லப்பிராணிகள் வளர்த்தல் என்று அனைத்திலும் சிக்கல்கள் எழும். இவற்றுக்கு ஓரளவு தீர்வு அளிப்பதுதான் குடியிருப்போர் நலச்சங்கம். கட்டுமான நிறுவனமே, அதிகளவில் குடியிருப்புகளை கட்டும் நிலையில், வாங்குவோரை கொண்டு இந்த நலச்சங்கங்களை உருவாக்கித் தருகின்றது.