

தனி வீடோ, அடுக்குமாடி குடியிருப்போ எதை கட்டுவதாக இருந்தாலும் அரசிடம் முறையாக அனுமதி பெறுவது அவசியம். அனுமதி பெற்று கட்டப்படும் கட்டிடங்களுக்கு எந்த காலத்திலும் சிக்கல்கள் எழாது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், வீட்டில் இருந்த படியே அனுமதியை குறைந்த காலகட்டத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒற்றைச் சாளர அனுமதி திட்டத்தை அதாவது ஒரே போர்ட்டலில் உள்ளாட்சி அமைப்புகள், இதர அமைப்புகளிடம் இருந்து ஒப்புதலை ஆன்லைனில் பெறும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
நமது தேவை அடிப்படையில், உரிய துறைக்கு விண்ணப்பித்தாலே போதுமானது. ஆவணங்களை தூக்கிக் கொண்டு அலைய தேவையில்லை. அதன்படி, இன்றைய சூழலில் சொந்த வீடு அல்லது குடியிருப்பு கட்டுவோர் கட்டிட அனுமதி பெற செய்ய வேண்டியது என்ன? யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இந்து தமிழ் திசையிடம் விளக்குகிறார், இந்திய கட்டுநர் சங்க, தமிழக கிளையின் சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி கமிட்டி தலைவர், பொறியாளர் எஸ்.ராமபிரபு.