கட்டுமானத்தின் புதிய பரிமாணம் இன்டர் லாக் பிரிக்ஸ்

கட்டுமானத்தின் புதிய பரிமாணம் இன்டர் லாக் பிரிக்ஸ்
Updated on
1 min read

கட்டுமானத் தொழில் பல்வேறு பரிமாண மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. அந்த வகையில் கட்டுமானத்தின் அடிப்படை மூலப் பொருட்களான ஆற்று மணல் மற்றும் களி மண்ணால் செய்யப்படும் செங்கலும் தேவையில்லை என்பது மட்டுமின்றி சிமெண்ட், மணல் கலந்த பூச்சும் வேண்டாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

இண்டர் லாக் பிரிக்ஸ் என்ற முறையில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் கற்களே இதற்கு காரணமாகும். இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த இண்டர் லாக் பிரிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் டி.பூபதி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் இண்டர் லாக் பிரி்க்ஸ் எனப்படும் சிமெண்ட் கற்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இவை ஒன்றோடு ஒன்று இணைக்கும் லாக்கிங் முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த பிரிக்ஸ் 6 இஞ்ச் மற்றும் 8 இஞ்ச் என்ற இரு அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. இதன் அளவுக்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in