

எப்எம்பி- Field Measurement Book) என்பது ஒரு நிலத்தின் இருப்பிடம், எல்லைகள், சர்வே எண், உட்பிரிவு எண், நிலத்தின் அளவு மற்றும் வடிவம் போன்ற விவரங்களைக் காட்டும் ஒரு வரைபடத் தொகுப்பாகும். வருவாய்த்துறையின் நில நிர்வாக ஆணையரகத்தால் பராமரிக்கப்படும் ஒரு முக்கியமான நில ஆவணம்.
வருவாய்த்துறையின் பட்டா, சிட்டா போன்ற பிற ஆவணங்களுடன் நில உரிமையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நில விவரங்கள்: ஒவ்வொரு நிலத்தின் துல்லியமான அளவுகள், எல்லைகள், வடிவம், மற்றும் அருகிலுள்ள நிலங்கள் பற்றிய தகவல்கள் எப்எம்பியில் இருக்கும். ஒவ்வொரு நிலத்துக்குமான சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல், நிலத்தை அளக்க, எல்லைகளைத் தீர்மானிக்க, நிலப் பிரச்சனைகளைத் தீர்க்க, மற்றும் சொத்து பரிவர்த்தனைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.