

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காகவும், குறைந்த விலையில் குடியிருப்புகள் கிடைக்கவும் ஒற்றைச்சாளர அனுமதி முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. கட்டிட அனுமதிக்காக பல்வேறு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டியிருப்பதால், காலதாமதத்தை தவிர்க்க, ஒற்றைச் சாளர திட்டத்தில் தடையின்மை சான்று வழங்கும் துறைகளை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உத்தேச தடையின்மை சான்று வழங்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
அதன்படி, ஒற்றைச் சாளர அனுமதியளிக்கும் திட்டத்தில், வனத்துறை, எல்காட், மெட்ரோ ரயில், வீட்டுவசதி வாரியம், புவியியல் மற்றும் சுரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, தெற்கு ரயில்வே, மாநில நெடுஞ்சாலைகள், தீயணைப்புத்துறை, இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய தொல்லியல்துறை, மின்வாரியம், ஓஎன்ஜிசி, சிட்கோ, தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையம், வேளாண்துறை, வேளாண் பொறியியல் ஆகிய 19 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன,உத்தேச தடையின்மை சான்று வழங்கும் வகையில், துறைகளுக்கு காலநிர்ணயமும் செய்யப்பட்டுள்ளது.