களப்பணி தாமதம் முடிவுக்கு வந்தது: உரிய ஆவணங்கள் அளித்தால் அன்றே பத்திரம்!

களப்பணி தாமதம் முடிவுக்கு வந்தது: உரிய ஆவணங்கள் அளித்தால் அன்றே பத்திரம்!
Updated on: 
2 min read

பத்திரப்பதிவில் பல்வேறு தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு, அலுவலகத்துக்கு விற்பவரும், வாங்குபவரும் வராமல், தங்கள் இடத்தில் அமர்ந்து கொண்டே பரிமாற்றங்களை செய்து கொள்ளும் வசதி வந்துவிட்டது.

இருப்பினும், நிலம் மற்றும் கட்டிடம் இருக்கும் நிலையில், அது தொடர்பான பரிமாற்றம் களப்பணி அடிப்படையிலேயே முடிவுறுகிறது. அதாவது, கட்டிடம் இருக்கும் பட்சத்தில், சார்பதிவாளர் நேரில் சென்றுகளப்பணி மேற்கொண்ட பின்னரே ஆவணம் உரியவருக்கு வழங்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த நடைமுறையில் தேவையற்ற தாமதம், முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது களப்பணி விதிகள் தளர்த்தப்பட்டு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், கட்டிடத்துக்கான உரிய ஆவணங்களை அளித்து, அதற்கான கட்டணங்களையும் செலுத்தும் பட்சத்தில் அன்றே ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in